சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துண்டு ஒரு தடவைதான் தவறும்.. போகசை திருப்பிய மோடி.. "ஆபரேஷன் மதுரை".. அலர்ட்டான அறிவாலயம்!

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வர இருக்கிறார். பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து அவர் தமிழ்நாடு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு வருவதாக இருந்தது. பொங்கல் விழாவை மதுரையில் அவர் கொண்டாடுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ஜன.7 முதல் 12-ம் தேதி வரை 1,100 இடங்களில் 'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சி பாஜக சார்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது.

இதெல்லாம் சரிப்பட்டு வராது.. சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது! கொரோனா மாநாட்டில் பிரதமர் மோடிஇதெல்லாம் சரிப்பட்டு வராது.. சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது! கொரோனா மாநாட்டில் பிரதமர் மோடி

கல்லூரி

கல்லூரி

ஆனால் பிரதமர் மோடி அப்போது தமிழ்நாடு வரவில்லை. அதிகரித்த கொரோனா கேஸ்களால் அவரால் தமிழ்நாடு வர முடியவில்லை. அந்த பயணத்தின் போது தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டதால், அப்போது ஆன்லைன் மூலம் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்காக பாஜக பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து கடைசியில் பயணம் நடக்காமல் போனது.

துண்டு தவறும்

துண்டு தவறும்

அப்போது துண்டு தவறிய நிலையில்.. இந்த முறை கண்டிப்பாக பிரதமரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக விரும்புகிறதாம். அதன்படி பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் அங்கிருந்து மதுரைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை - தேனி அகல ரயிலப்பாதையை தொடங்கி வைக்க அவர் வருவார் என்று கூறப்படுகிறது.

ஓபிஆர்

ஓபிஆர்

மதுரை வரும் அவரை பாஜகவின் முக்கிய தலைகள் சந்திக்க உள்ளனர். தமிழ்நாடு பாஜகவில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி பாஜகவினர் அவரிடம் பேச உள்ளனர். கட்சியில் நிலவும் சில பூசல்கள், ஆளும் தரப்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகள், மத மாற்றம் தொடர்பான புகார்கள், இலங்கை தமிழர்கள் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி இதில் பாஜகவினர் பிரதமர் மோடியிடம் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்

அன்று ஆன்லைனில் பிரதமர் மோடி இருந்த இந்த நிகழ்விலேயே முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து அப்போது பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் பிரதமர் மோடியை இரண்டு பேர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறி இருந்தார்.

சந்திப்பு

சந்திப்பு

இந்த நிலையில் இவருடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக எம்பியும் தேனியை சேர்ந்தவருமான ஓ பி ரவீந்திரநாத் உடன் சந்திப்பு நடத்த வாய்ப்பு உள்ளது. முன்னதாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தேனி அல்லது போடி வரை நீட்டிக்க வேண்டும் என்று ஓபிஆர் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் மதுரை தேனி அகலரயில்பாதை தொடக்க விழாவில் ஓபிஆரை பிரதமர் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த தமிழ்நாடு பயணமே பல சந்திப்புகளை மையமாக கொண்ட.. ஆபரேஷன் மதுரையாக இருக்க போகிறது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

 அலர்ட் அறிவாலயம்

அலர்ட் அறிவாலயம்

ஆளும் திமுக தரப்பும் இந்த விவகாரத்தை கவனித்து வருகிறது. திமுக ஆளும் கட்சி என்பதால் பிரதமருக்கு எதிராக கோ பேக் மோடி பிரச்சாரம் செய்யப்படாது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்கிறார்கள். அதே சமயம் பிரதமர் மோடி யாரை எல்லாம் சந்திக்கிறார் என்பதை அலர்ட்டாக திமுக கவனிக்க உள்ளதாம். அதோடு பிரதமர் மோடியிடம் நீட் விவகாரம் குறித்தும் அழுத்தம் கொடுக்க ஆளும் திமுக முடிவு செய்துள்ளதாம்.

English summary
DMK and BJP focuses on the PM Modi visit to Tamilnadu later this month. பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வர இருக்கிறார். பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து அவர் தமிழ்நாடு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X