பிடிஆர் + மேயர் ப்ரியா + எம்ஆர்கே.. திமுக 2024 தேர்தல் டீமில்.. பெரிய ட்விஸ்ட்.. இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. தேர்தல் தொடர்பான 3 முக்கியமான குழுக்களை அமைத்து திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

DMK announces its three team for Lok Sabha 2024 election: PTR to Mayor Priya, Many surprises

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இரண்டாவது குழு: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

DMK announces its three team for Lok Sabha 2024 election: PTR to Mayor Priya, Many surprises

அதேபோல் மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவராக . கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

மூன்றாவது குழு: டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்), ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்), டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்), கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்), மேயர் பிரியா ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

குழுவில் மாற்றம்: இந்த குழுக்களில் உறுப்பினர்கள கலவையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். உதாரணமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் லைம் லைட்டிற்கு திரும்பி உள்ளார். கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தவர் மீண்டும் லைம் லைட்டிற்கு திரும்பி உள்ளார்.

DMK announces its three team for Lok Sabha 2024 election: PTR to Mayor Priya, Many surprises

அதன்படி சமீபத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அதன்பின் மதுரை ஜல்லிக்கட்டில் பிடிஆர் கவனம் பெற்றார். ஆனாலும் கட்சி ரீதியாக அவருக்கு பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்போது திடீரென பிடிஆருக்கு தேர்தல் அறிக்கை.. அதாவது வாக்குறுதிகள் தயாரிக்கும் குழுவில் இடம் கிடைத்துள்ளது.

மேயர் பிரியா: அதேபோல் மேயர் பிரியா முதல்முறையாக திமுகவின் தேர்தல் குழு ஒன்றில் இடம் பிடித்துள்ளார். திமுக இந்த முறை அறிவித்த 3 தேர்தல் குழுக்களில் மிக மிக வயது குறைந்த இளமையான நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ எழிலன் ஆகியோரும் குழுவில் இடம் பிடித்துள்ளனர். பொதுவாக திமுக தேர்தல் குழுக்களில் நியமிக்கப்படாமல் இருந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த முறை குழுக்களில் இளைஞர்கள் + மூத்தவர்கள் என்று கலவையாக தேர்வு செய்துள்ளனர். தேர்தல் வாக்குறுதி குழுவில் இளம் உறுப்பினர்கள் பலர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+