கேசிஆருக்கு கட்டம் கட்டிய ஸ்டாலின்.. தெலங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு என திமுக அறிவிப்பு!
சென்னை: தெலங்கானா சட்டசபை தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் உள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் இந்த மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்டது.

இதைடுத்து 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த 2 சட்டசபை தேர்தல்களிலும் சந்திரசேகர ராவ் தான் வெற்றி பெற்று முதல்வராகி உள்ளார். அப்போது அவரது கட்சி தெலங்கனா ராஷ்ட்ரிய சமீதி என்ற பெயரில் போட்டியிட்டு வென்றது. தற்போது அவரது கட்சி பிஆர்எஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தெலங்கானா சட்டசபையின் 5 ஆண்டு காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் மெஜாரிட்டியுடன் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் 3வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் தெலங்கானா சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் நேரடி போட்டி என்பது பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே தான் நடக்கிறது. அதோடு பல கருத்து கணிப்புகள் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. மாறாக பாஜக மற்றும் ஓவைசியின் கட்சிகள் ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெறும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதேபோல் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், திமுக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் நீட்சியாக தான் தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு திமுக ஆதரவு வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நவம்பர் 30ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தெலங்கானா மாநில கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டு கொள்ளப்படுகிறார்கள்'' என கூறப்பட்டுள்ளது.
*******
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications