திமுகவில் தங்கதமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பொறுப்பு.. கொள்கை பரப்பு செயலாளரானார்
Recommended Video
சென்னை: திமுகவில் தங்கதமிழ்ச் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதிமுகவிலிருந்து இருந்து அமமுகவில் இணைந்த தங்கதமிழ்ச் செல்வன் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். இதையடுத்து அவர் தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத்தை வெல்ல வேண்டும் என போராடினார். எனினும் தோல்வியுற்றார்.

மிரட்டல் வீடியோ
இதையடுத்து அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த சூட்டோடு சூடாக தினகரனின் உதவியாளரை தங்கம் மிரட்டும் ஆடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பாகியது.

பொறுப்பு
இதையடுத்து அவர் அக்கட்சியிலிருந்து விலகி கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அவருக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்கதமிழ்ச் செல்வன் நியமிக்கப்பட்டார்.

பொதுச் செயலாளர்
ஏற்கெனவே திருச்சி சிவா, ஆ ராசா ஆகியோர் அப்பதவியில் இருக்கும் நிலையில் 3-ஆவதாக தங்கத்துக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வழங்கினார்.

இலக்கிய அணி
அது போல் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த விபி கலைராஜனுக்கும் இலக்கிய அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கெனவே இலக்கிய அணி செயலாளராக இந்திரகுமாரி செயல்பட்டு வருகிறார்.

தங்கத்துக்கு பதவி ஏன்
தேனி மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளதற்கு காரணம் தற்போது அங்குள்ள மாவட்ட நிர்வாகிகள்தான். எனவே அவர்களை நீக்கிவிட்டு அப்பதவியை தங்கத்துக்கு வழங்க ஸ்டாலினுக்கு விரும்பவில்லை.

அறிவாலய வட்டாரங்கள்
இன்னொன்று தங்கதமிழ்ச் செல்வன் சில நாட்களாக செயல்படாமல் இருப்பதால் அவரை உற்சாகப்படுத்த ஏதேனும் ஒரு பதவி வழங்க வேண்டும். இதனாலேயே கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications