ஆத்தூரை புரட்டிப் போட்ட ஐ.பெரியசாமி.. 1.34 லட்ச வாக்குகள் வித்தியாசம் - எதிர் கேம்ப் டெபாசிட் காலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி ஒன்னேகால் லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் முன்னிலை பெற்ற திமுக, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இன்றிரவு தேர்தலின் முழு முடிவுகள் வெளியாகும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கிறார். அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து, திமுக சார்பில் தமிழக முதல்வராகிறார் ஸ்டாலின்.

 சரிவில் அதிமுக

சரிவில் அதிமுக

இரவு 8 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரத்தில், 159 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 75 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் லீடிங் பெற்றுள்ளது.

 பெரும் வாக்கு வித்தியாசம்

பெரும் வாக்கு வித்தியாசம்

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி பிற்பகலில் 40 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 7 சுற்றுகள் முடிவில், ஐ.பெரியசாமி 52,872 வாக்குகள் பெற்றிருந்தார். பாமக வேட்பாளர் திலகபாமா 13,275 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். அப்போதே இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 39,597.

 டெபாசிட் காலி

டெபாசிட் காலி

இந்த சூழலில், திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறார். மொத்தமாக 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளார் திலகபாமா உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். ஐ.பெரியசாமி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்

 வெடியும் ரெடி

வெடியும் ரெடி

வத்தலக்குண்டு ஒன்றிய கவுன்சிலர் விராலிப்பட்டி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று இனிப்பு கொடுப்பதற்கு இரண்டாயிரம் லட்டுகளை பாக்கெட் போட்டு வருகிறாராம். அதுபோல் கொடைக்கானலில் திமுக தொண்டர்கள் வெடியுடன் போஸ் கொடுக்கும் போட்டோக்களை முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+