99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக்
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில், 'கை' கொடுப்பதா அல்லது கழற்றிவிடுவதா என்கிற நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறது அறிவாலயம். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் இழுபறியால் தி.மு.க தலைமை கடும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது. "இன்னும் எத்தனை நாள்தான் காத்திருப்பது?" என உடன்பிறப்புகள் முணுமுணுக்க, இப்போது ஒரு கறாரான 'டெட்லைன்' நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
மார்ச் 3... இதுதான் கடைசி!
காங்கிரஸ் மேலிடம் தனது முடிவை அறிவிக்க மார்ச் 3-ம் தேதி வரை மட்டுமே காத்திருக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பின்னால் ஒரு பலமான கணக்கும் இருக்கிறது.
மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை (Rajya Sabha) இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சூடுபிடித்துள்ள நிலையில், மார்ச் 5-ம் தேதிக்குள் தி.மு.க தனது வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டும். கூட்டணிக் கணக்குகள் முடிவானால் மட்டுமே, மாநிலங்களவை சீட் யாருக்கு என்பதை உறுதி செய்ய முடியும் என்பதால், மார்ச் 3-ஐ 'இறுதி நாள்' ஆகக் குறித்துள்ளது தி.மு.க.
அறிவாலயத்தின் வியூகம்
"தேர்தல் நெருங்கும் நேரத்தில் இழுபறி நீடித்தால் அது களப்பணியைப் பாதிக்கும். அதனால், காங்கிரஸின் பதிலுக்காகக் காத்திருந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்பதே ஆளுங்கட்சியின் தற்போதைய மைண்ட் செட். ஒருவேளை மார்ச் 3-க்குள் காங்கிரஸ் இறங்கி வராவிட்டால், தி.மு.க தனது அடுத்தகட்ட 'பிளான் பி'-யை கையில் எடுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சத்தியமூர்த்தி பவன் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி முறியும் சூழல்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 99 சதவீதம் திமுகவுடன் உறவை முறித்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு ராகுல் வந்துள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. மீதமுள்ள 1 சதவீதம் மட்டும் ஊசலாட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள்.
அந்த 1 சதவீதம் என்பது, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறக்கூடாது என்று சோனியா காந்தி வலியுறுத்தி வந்தார். தற்போது, இது குறித்து ராகுலிடம் நேரடியாகப் பேசாமல், பிரியங்கா காந்தியின் மூலமாக ராகுலிடம் வலியுறுத்தி வருகிறார். பிரியங்காவும், திமுகவிடம் கறார் காட்ட வேண்டாம். திமுக, காங்கிரசின் நம்பிக்கையான பார்ட்னர். அதை தவிர்த்துவிடக் கூடாது என சொல்லி வருகிறார். அதனால் தான் அந்த 1 சதவீதம் தொங்கிக் கொண்டிருக்கிறது.

திமுக மீது கடும் கோபத்தில்தான் இருக்கிறார் ராகுல்காந்தி. இதற்கு காரணம் காங்கிரஸ் ஐவர் குழுவின் தலைவர் கிரீஸ் சோடங்கர்தான். அவர்தான் ராகுலுக்கு ஏகத்துக்கும் ஸ்க்ரூ ஏற்றிவிட்டிருக்கிறார் என்கிறார்கள் தமிழக காங்கிரசின் திமுக ஆதரவு எம்.பி.க்கள்.
பவர் ஷேரிங் என்கிற வார்த்தைக்கே இடமில்லை
எம்.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, ''அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து அன்றைய தினம் மதியமே டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார் கிரீஸ் சோடங்கர். ராகுல்காந்தியை சந்தித்தார். திமுகவிடம் நடத்திய 45 நிமிட பேச்சு வார்த்தையின் முழுவதையும் ஒப்புவித்தார் சோடங்கர். குறிப்பாக, நாம் பேசுவதை திமுக குழுவினர் காது கொடுத்துக்கூட கேட்க மறுக்கிறார்கள். பவர் ஷேரிங் என்கிற வார்த்தையை நாம் எடுத்தாலே, கையை நீட்டியும் ஆட்டியும் நோ நோ நோ என கோரசாக குரல் மறுக்கின்றனர்.
ஒன்லி அசெம்ப்ளி சீட்டை மட்டும் பேசுவோம். மற்றதை விவாதிக்கிற இடம் இது இல்லை என்று அழுத்தமாக சொன்னவர்கள், நான் சில விசயங்களை தெளிவுபடுத்த நினைத்து பேச துவங்கினால், அதான் உங்க கட்சி தலைவர் (செல்வப்பெருந்தகை) பேசறாரே.... அதையொட்டியே பேசுவோமே என திசைத் திருப்பினர். காங்கிரசை லெப்ட் ஹேண்ட் ட்ரீமெண்டில் தான் திமுக நடத்தியது.
சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை. மொத்தத்தில், கூட்டணியை விட்டு நீங்களே போய்விடுங்களேன்னு சொல்லாமல் சொல்வது போலிருந்தது திமுக குழுவினரின் நடவடிக்கைகள் என்று ராகுல்காந்தியிடம் ஒப்புவித்துள்ளார் கிரிஸ் சோடங்கர். அவரின் ஒவ்வொரு பேச்சும் ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் வந்த கோபம் தான், ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ராகுல் ஸ்டாலினை ப்ரதர் என சொல்லாமல் தவிர்த்தது.
மை டியர் பிரதர்
வழக்கமாக "மை டியர் பிரதர்" என்று உருகும் ராகுல் காந்தி, இந்த முறை ஏனோ மிகத் தாமதமாக, ஒரு 'ஃபார்மல்' வாழ்த்தோடு நிறுத்திக்கொண்டார். பிரதமரே அதிகாலையிலேயே வாழ்த்திவிட, ராகுலோ நேற்று மதியம் 2 மணிக்கு மேல்தான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "சகோதரர்" என்ற வார்த்தை இல்லை; வெறும் "தமிழக முதல்வர்" என்ற சம்பிரதாய வாழ்த்துதான் இருந்தது.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்தான் 'டாப் நாட்ச்'! பிற தலைவர்களுக்கு விரிவாகப் பதிலளித்த ஸ்டாலின், ராகுலுக்கு மட்டும் "நன்றி (Thank you for your warm wishes)" என்று மிகச் சுருக்கமாக, எந்த ஒரு கூடுதல் பாசமும் இன்றி முடித்துக்கொண்டார். "நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்" என ஸ்டாலின் காட்டிய இந்த 'சிம்பிள் டோன்' டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுக்கு எதிராக கிரிஸ் சோடங்கர் போட்டுக் கொடுத்ததால் தான் கூட்டணி முறியும் சூழல் உருவாகியிருக்கிறது '' என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்
-
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்











Click it and Unblock the Notifications