அமைச்சரான உதயநிதி- ஆரத்தழுவிய அம்மா, அத்தை கனிமொழி.. வாரி அணைத்து முத்தமிட்ட சித்தப்பா தமிழரசு!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 10-வது இடம்பெற்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற தருணத்தில் குடும்பத்தினர் அரவணைத்து ஆரத்தழுவி வாரி அணைத்து முத்தமிட்ட வீடியோ காட்சிகளை திமுகவினர் நெகிழ்வுடன் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரன், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன்.. அடிப்படையிலேயே அரசியல் குடும்பம்.. அப்புறம் எப்படி அரசியலில் நுழையாமல் இருக்கத்தான் முடியும்?
2019-ம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியோடு அரசியலில் அடியெடுத்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். எண்ணிக்கையில் 3 ஆண்டுகள்தான் எனிலும் ஒவ்வொரு நகர்விலும் முத்திரை பதித்தவர் உதயநிதி. திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குறிப்பிடுவதைப் போல, நாங்கள் எளிமையாக இருப்பது என்பது வேறு; உதயநிதி எளிமையாகவே இருப்பது வேறு என்பதற்கு ஏற்ப எப்போதும் எல்லோரும் அணுகக் கூடிய எளிமையானவராக இருந்தார். அதேபோல் நாங்கள் எல்லாம் மக்களிடம் உரையாற்றுகிறவர்கள்; ஆனால் உதயநிதியோ மக்களுடன் உரையாடுகிறவர் என மக்கள் மொழியில் அவர் பேசுவதையும் சுட்டிக்காட்டி இருப்பார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். இப்படி எளிமையானவராக, மக்களின் மொழியில் உரையாடக் கூடியவராக இருந்ததால் திமுகவினரின் வருங்காலமாக இயல்பாகவே கொண்டாடப்பட்டார் உதயநிதி.

இத்தகைய பின்னணியில்தான் 2021 சட்டசபை தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்; சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிட்டார்; ஒற்றை செங்கல் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசை கிடுகிடுக்க வைத்தார். பொதுவாக அதிகம் பேசாமல் செயலில் அதிகம் காட்டுகிறவர் உதயநிதி என்பதற்கு அனைத்து தொகுதிகளிலும் திராவிடர் இயக்க பாசறை கூட்டங்களை நடத்திய ஒன்றே உதாரணமாக சொல்லலாம். திராவிடர் கழகத்தில்தான் இத்தகைய கூட்டங்கள் நடைபெறும். தேர்தல் அரசியலின் ஆதார மையமாக இருக்கிற திமுகவிலும் கூட கொள்கை கூட்டங்களை நடத்த முடியும் என ஆணித்தரமாக நம்பி, தம் பின்னால் வரும் இளைஞர்களை கொள்கைப் போர்வாள்களாக கூர் தீட்டியவர் உதயநிதி ஸ்டாலின் என்பது மிகையும் அல்ல. யதார்த்தமான உண்மைதான்.

இதனால்தான் 19 மாத காலம் எம்.எல்.ஏ.வாக பயணித்த நிலையில் இன்று தமிழக அமைச்சராக பதவியேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 10-வது இடம் உதயநிதிக்கு வழங்கப்பட்டது. நாடி நரம்பில் திராவிடம் ஊறிப் போனவர் உதயநிதி என்பதைத்தான் "எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்" என்கிற அவரது ட்விட்டர் பதிவு வெளிப்படுத்துகிறது.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். எப்போதும் போல வழக்கமான உடையில் வந்துதான் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக பதவியேற்ற பின்னர் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா உள்ளிட்டோரின் அரவணைப்போடு வாழ்த்தைப் பெற்றார். தந்தையை முத்தமிட்டு வாழ்த்தினார் மகள். அதன்பின்னர் அத்தையும் திமுக எம்பியுமான கனிமொழி, உதயநிதியை அரவணைத்து வாழ்த்து தெரிவித்தார். அருகே நின்றிருந்த முதல்வர் ஸ்டாலினின் சகோதரரான உதயநிதியின் சித்தப்பா தமிழரசுவின் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார். அப்போது உதயநிதியை வாரி அணைத்து தமிழரசு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மு.க.தமிழரசுவின் மனைவியும் உதயநிதியை வாழ்த்தினார். அப்போது சித்தியிடம் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார் உதயநிதி. ஆனால் சித்தியோ பதைபதைத்துப் போய் தூக்கிவிட்டார்.. இந்த நெகிழ்வைத் தரும் வீடியோ, இப்போது திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக VS அதிமுக.. சென்னையில் 11 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்!












Click it and Unblock the Notifications