பொதுமக்கள் அஞ்சலிக்கு அன்பழகன் உடல்... திமுகவினர் கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு அவரது உறவினர்களும், திமுகவினரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், அன்பழகனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் திமுக நிர்வாகிகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அன்பழகன் உடலை ஏற்றி வந்த வாகனத்திற்கு முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ஊர்வலமாக இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் அணி வகுத்தனர். மேலும், ஸ்டாலினும் தனது காரில் அன்பழகன் இல்லத்திற்கு சென்றார்.

பேராசிரியர் அன்பழகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்பாக்கம் கார்டனில் உள்ள அவரது மகன் அன்புச்செல்வன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்பழகனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். மேலும், திமுக முன்னணி நிர்வாகிகள் அனைவரும் அன்பழகன் இல்லத்தில் குவிந்துவிட்டனர். இதனிடையே தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அன்பழகன் உடல் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதால் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் வரக்கூடும். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஏற்பாடு செய்து வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் எந்த அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெறா வண்ணம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே அன்பழகனின் உடலை அவரது வீட்டுக்கு கொண்டு சென்ற போது கருணாநிதிக்கு போலவே தொண்டர்கள் கூட்டம் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications