தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக?
திண்டுக்கல்: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் திண்டுக்கல்லில் களமிறங்குகிறார் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான ஐபிஎஸ் செந்தில்குமார். பத்தாண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல்லில் அதிமுகவை திமுக நேரடியாக சந்திப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இரண்டு முறை வென்ற திண்டுக்கல் சீனிவாசனுக்கு டஃப் கொடுப்பாரா செந்தில் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார் திமுக அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனான ஐ.பி. செந்தில்குமார். இரு முறை பழனியில் வென்ற இவர் தற்போது திண்டுக்கல்லில் தனது 4வது தேர்தலில் முதல்முறையாக களமிறங்குகிறார்.

அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் 1972 முதல் அதிமுக உறுப்பினா், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவு செயலா், திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநிலப் பொருளாளா், மாவட்ட அவைத் தலைவா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது, வழிகாட்டுதல் குழு உறுப்பினா், அமைப்புச் செயலா், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறாா்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளாா். 2016ல் தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அமைச்சராகவும் பணியாற்றினாா்.
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1962 முதல் நடைபெற்ற தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதியை பொருத்தவரை திமுக ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற தேர்தல்களில் சிபிஎம் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆறு முறை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் ஐ பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார் இந்த முறை திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடப் போவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
ஐபி செந்தில்குமார் திண்டுக்கல் திமுக மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும், பழனி தொகுதியில் 3 முறை போட்டியிட்டு கடைசி 2 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications