எக்ஸிட் போல் கொடுத்த உற்சாகம்.. இன்று மாலை தி.மு.க வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் தி.மு.க வெற்றி பெறும் என்று கூறியுள்ள நிலையில் இன்று மாலை திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தமிழகத்தை அடுத்த 5 வருடங்களுக்கு ஆட்சி செய்யப்போவது யார்? என்பது அன்று தெரிந்து விடும்.

இதற்கிடையே தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வெளியிட்ட பெரும்பாலான கருத்து கணிப்பில் திமுக அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும்(எக்ஸிட் போல்) திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை திமுக வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications