துரைமுருகன், பொன்முடி மகன்களுக்கும் வாய்ப்பு.. வாரிசுகளுக்கு அள்ளிக்கொடுத்த திமுக
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக திமுக தனது, வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் பல விஐபி வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் பலரும் வாரிசுகள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளதை அப்படியே, கடந்து செல்ல முடியாது.
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, முன்னாள் முதல்வரான கருணாநிதியின் மகள். அதாவது திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரி.

வடசென்னையில் போட்டியிடும் டாக்டர் கலாநிதி, ஆற்காடு வீராசாமியின் மகன். மத்திய சென்னை லோக்சபா தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னாள் மத்திய அமைச்சர் என்பதோடு, முரசொலி மாறன் மகனாகும்.
தென் சென்னை லோக்சபா தொகுதி வேட்பாளர், தமிழச்சி தங்கபாண்டியன், தங்கபாண்டியனின் மகளாகும். கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் கவுதம சிகாமணி பொன்முடியின் மகனாகும்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன். இதேபோல அரக்கோணம் ஜெகத்ரட்சகன், நீலகிரி ஆ.ராசா, ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்பாலு, தஞ்சை பழனிமாணிக்கம் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர்களாகும். பெரும்பாலும் மக்களுக்கு நன்கு அறிமுகமான பெரும் தலைகளையே களத்தில் இறங்கியுள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications