96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாளை திமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
கருணாநிதி மறைந்து ஓராண்டாக உள்ளது. திமுகவின் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்துவதை அக்கட்சியினர் கடைபிடித்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு, லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் வெற்றிக்குப் பின்னரும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அமோக வெற்றி
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளையும் சட்டசபை இடைத்தேர்தல்களில் 13 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. இதையடுத்து சட்டசபையில் திமுகவின் தனிப்பட்ட பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய ஆலோசனை
இதனிடையே லோக்சபா மற்றும் சட்டசபை ஆகியவை கூட இருக்கின்றன. இந்த கூட்டங்களில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கருணாநிதி பிறந்த நாளான இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மா.செ.க்கள் கூட்டம்
இதேபோல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் இன்று நடைபெற இருக்கிறது. தேர்தல் பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் திமுக இளைஞரணி செயலாளர் பதவிக்கு நடிகர் உதயநிதியை நியமிக்கவும் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்த உள்ளனர். இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

நந்தனத்தில் பொதுக் கூட்டம்
இதனைத் தொடர்ந்து சென்னை நந்தனத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

அறிவாயலத்தில் ஸ்டாலின் மரியாதை
மேலும் தமிழகம் முழுவதும் காலை முதலே திமுகவினர், கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் இயக்கம் குறித்த அறிவை வளர்க்கும் வகையில் ஏராளமான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக முக்கிய நிர்வாகிகளும் கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். முன்னதாக கவிஞர் வைரமுத்து கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications