"எல்லோரையும் களமிறக்குங்க".. உளவுத்துறை திடீர் ரிப்போர்ட்.. டாப் தலைகளுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக இதுவரை பெரிதாக பிரச்சாரம் செய்யாத நிலையில் நேற்றில் இருந்து தீவிர பிரச்சாரத்தை அக்கட்சி தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களை மட்டும் குறி வைத்து பாஜக தீவிரமாக வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறது. கொங்கு மற்றும் தென் மாவட்டடங்களை குறி வைத்து அதிமுக வீடு வீடாக தெரு தெருவாக பிரச்சாரம் செய்து வருகிறது.

திமுக பிரச்சாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் திமுக பிரச்சாரம் செய்து வந்தாலும், பாஜக, அதிமுக அளவிற்கு வீடு வீடாக பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக, பாஜக அளவிற்கு திமுகவினர் அவ்வளவு பெரிதாக களத்தில் பிரச்சாரம் செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலின் மற்றும் மற்ற சில அமைச்சர்கள் மட்டுமே ஆங்காங்கே சாலையோர பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதில் திமுக கண்டிப்பாக வெற்றிபெற்றுவிடும்.

மேயர் திமுக
பெரும்பாலான மேயர் பதவிகளை திமுகதான் அள்ள போகிறது என்று ஏற்கனவே உளவுத்துறை தமிழ்நாடு அரசுக்கு கொடுத்த ரிப்போர்ட் காரணமாக அமைச்சர்கள், நிர்வாகிகள் இப்படி மெத்தனமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் திமுக தலைமைக்கு உளவுத்துறை கொடுத்த புதிய ரிப்போர்ட்டில், அதிமுக, பாஜக களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. திமுகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடைசி நேரத்தில் நிலவரம் மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவி
அதாவது கடைசி நேரத்தில் சில மேயர் பதவிகளை எதிர்க்கட்சிகள் கைப்பற்றும் நிலை வந்துவிடும் என்று ஆளும் தரப்பிற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. முக்கியமான தலைகளை பிரச்சாரத்தில் இறக்குங்கள் என்று திமுகவிற்கு உளவுத்துறை அறிவுரை வழங்கி உள்ளதாம். இதையடுத்தே நேற்றில் இருந்து திமுக தனது மொத்த படையையும் பிரச்சாரத்திற்காக களமிறக்கி உள்ளதாக ஆளும் தரப்பு தெரிவிக்கிறது. முதல்வரை தவிர மற்ற எல்லோரும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

மாவட்ட செயலாளர்கள்
முக்கியமாக மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டும் என்று தலைமை உத்தரவு போட்டு இருக்கிறதாம். இதனால்தான் நேற்று ஒரே நாளில் எம்பி கனிமொழி, எம்பி ராசா, மற்ற திமுகவின் டாப் எம்பிக்கள் எல்லோரும் மொத்தமாக பிரச்சாரத்தில் குதித்து உள்ளனர். அமைச்சர்களும் களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் திமுக தற்போது வீடு வீடாக பிரச்சாரம் செய்வது இல்லை என்ற புகாரும் தலைமைக்கு சென்று உளவுத்துறையிடம் இருந்து சென்றுள்ளதாம்.

வாக்கு சேகரித்தனர்
அதிமுக, பாஜகவில் இருந்து வந்து இரண்டு முறை வாக்கு கேட்டுவிட்டனர். ஆனால் திமுகவினர் இதுவரை எங்கள் வீடுகளுக்கு ஒரு முறை கூட வந்து வாக்கு கேட்கவில்லை. எம்எல்ஏக்கள் சிலர் களத்தில் இல்லை என்றும் திமுகவினர் தலைமைக்கு புகார் மெசேஜ் அனுப்பி உள்ளனராம். இதனால் தற்போது திமுக தரப்பு வீடு வீடாக பிரச்சாரம் செய்வதை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் நிலவரம் மாறிவிட கூடாது.

பெண் தலைவர்கள்
அதேபோல் திமுக சார்பாக பெண் தலைவர்கள் இந்த முறை பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் கூடுதலாக பெண் தலைவர்களை களத்திற்கு செல்லும்படியும் தலைமை அறிவுறுத்தி உள்ளதாம். ஆளும் கட்சியாக இருந்து கொண்டு முக்கிய மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை இழந்துவிட கூடாது. அதனால் எங்கெல்லாம் பின்னடைவை சந்தித்து இருக்கிறோமோ அங்கெல்லாம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யுங்கள் என்று உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications