கோட்டையை பிடிக்க கோதாவில் குதித்த திமுக.. 3 சென்னையிலும் போட்டி!

சென்னையின் மத்திய, வட, சென்னை தொகுதிகளில் திமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    லோக் சபா தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு

    சென்னை: சென்னையில் இருக்கும் 3 தொகுதிகளான வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என அனைத்திலுமே திமுக களமிறங்கி உள்ளது!

    திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் தேர்தலை சந்திப்பது முதல் முறை இது என்பதால் மிக கவனமாக ஒவ்வொன்றும் ஸ்டாலினால் கையாளப்பட்டு வருகிறது.

    இதற்காக கூட்டணிகளை அமைப்பதிலும், கூட்டணி கட்சிகளை சேர்த்து கொள்வதிலும் நிறையவே டைம் எடுத்து கொண்டார்.

    திமுக போட்டி

    திமுக போட்டி

    இன்றைய தினம் சென்னையின் 3 தொகுதிகளிலும் திமுக போட்டியிட போவதாக சொல்லி இருக்கிறார். ஆனால் இங்கு யார் யார் போட்டியிட போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

    தயாநிதி மாறன்

    தயாநிதி மாறன்

    மத்திய சென்னை என்றாலே திமுகதான் என்ற பெயர் தங்கிவிட்டது போலும். அதாவது மாறன் குடும்பத்துக்குதான் இந்த தொகுதி நெருக்கம் என்பதால், இந்த முறையும் தயாநிதி மாறன் தான் வேட்பாளராக இருக்ககூடும் என சொல்லப்படுகிறது. அவர் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    தமிழச்சி தங்கபாண்டியன்

    தமிழச்சி தங்கபாண்டியன்

    அதேபோல, தென்சென்னையில் வலுவாக இருப்பது அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்தான். அதனால் தன் மகன் உதயநிதியை அங்கு களமிறக்ககூட திமுக தரப்பில் யோசிக்கப்பட்டதாம். மற்றொரு புறம் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அங்கு களமிறங்க நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    நம்பிக்கை நட்சத்திரம்

    நம்பிக்கை நட்சத்திரம்

    வடசென்னை.. கேட்கவே வேண்டாம்! ஆற்காடு வீராசாமி கட்சியில் தீவிரமாக இல்லாவிட்டாலும் தனது மகனை அங்கே நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். எப்படி, யார் அங்கே நின்றாலும் அவர்களுக்கு பக்கபலமாக எல்லாவித பணிகளையும், செய்துதர இருக்கவே இருக்கிறார் நம்பிக்கை நட்சத்திரம் சேகர் பாபு!

    பெரிய எதிர்பார்ப்பு

    பெரிய எதிர்பார்ப்பு

    ஆக மொத்தம் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என தலைநகரையே திமுக தன்வசப்படுத்தி தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. திமுக வின் கோட்டை சென்னை என்ற பெயர் உள்ளது. பல ஜாம்பவான்களை தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது சென்னை. எனவே 3 சென்னையிலும் திமுக வேட்பாளர்கள் யார் என்பதைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு இருக்கக் கூடும் என்பதால் சென்னையில் திமுக என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+