கமல்ஹாசனுக்கு போனில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று 64வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கமல்ஹாசனுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், மாற்றுக் கட்சி தலைவராக இருந்தபோதிலும், கமலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

[20 தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன் அறிவிப்பு ]
இன்று காலை கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும், எனவே அந்த கூட்டணியில் திமுகவிற்கு இடமிருக்குமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஸ்டாலினே, கமல்ஹாசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications