செல்ல பிராணி மீது இரக்கம்...வீடியோ வெளியிட்ட நபர்...ஓடி வந்து பாராட்டிய ஸ்டாலின்
சென்னை : நடக்க முடியாத தனது செல்ல பிராணிக்கு நடைவண்டி வடிவமைத்து, அந்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட நபருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடக்க முடியாத தனது வளர்ப்பு நாயான வீராவிற்கு நடைவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார் காசி என்பவர். அந்த நடைவண்டியை பயன்படுத்தி எப்படி நடப்பது என்பது பற்றி அந்த நாய்க்கு பயிற்சியும் கொடுத்துள்ளார். பூங்கா ஒன்றில் நாய்க்கு பயிற்சி கொடுத்து, நடைவண்டியுடன் நாய் நடக்கும் வீடியோவை அவர், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீட்விட் செய்த ஸ்டாலின், அத்துடன் காசியை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், நடக்க இயலாத தனது வளர்ப்புப் பிராணி வீராவுக்காக நடைவண்டியை வடிவமைத்திருக்கும் திரு.காசியின் செயல் நெகிழச் செய்கிறது. யானை மீது எரியும் டயரை வீசுபவர்களுக்கு மத்தியில் தான் காசி போன்ற அன்புநிறை மனிதர்களும் வாழ்கிறார்கள். நன்றி காசி! வீராவின் நடை மகிழ்ச்சி பூக்கச் செய்கிறது! என குறிப்பிட்டுள்ளார்.
நடக்க இயலாத தனது வளர்ப்புப் பிராணி வீராவுக்காக நடைவண்டியை வடிவமைத்திருக்கும் திரு.காசியின் செயல் நெகிழச் செய்கிறது.
— M.K.Stalin (@mkstalin) February 1, 2021
யானை மீது எரியும் டயரை வீசுபவர்களுக்கு மத்தியில் தான் @akaasi போன்ற அன்புநிறை மனிதர்களும் வாழ்கிறார்கள். நன்றி காசி!
வீராவின் நடை மகிழ்ச்சி பூக்கச் செய்கிறது! https://t.co/UouRbErnZq
ஸ்டாலினின் பாராட்டை கண்ட அந்த நபரும். ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பி உள்ளனர். ஸ்டாலினையும், காசியையும் பாராட்டி பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 35000 க்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications