இரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்!
திருவாரூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
Recommended Video

திருவாரூர்: திருவாரூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது.
இதற்கான வேட்பாளர்களை திமுக கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று முறைப்படி தொடங்கினார்.

நேற்று இரவே சென்றார்
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவே திருவாரூர் சென்றார். நேற்று இரவு திருவாரூரில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 8 மணி அளவில் அவர் திருவாரூர் சென்றார்.

மரியாதை செலுத்தினார்
அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தார்.

இன்று காலை பிரச்சாரம்
அதன்பின் இன்று காலை 7 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கினார். திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். தெரு தெருவாக நடந்தபடியே திருவாரூரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறது.

மாலை வரை
இந்த பிரச்சாரம் இன்று மாலை வரை நடக்கும். அதன்பின் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, ஆடலரசன்முன்னாள் அமைச்சர்கள் நேரு, மதிவாணன் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கூட்டணி கட்சி வேட்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications