“மூச்சுத் திணறும் காசா.. துயரத்துக்கு முடிவு கட்ட உலகம் ஒன்றுபட வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: காசாவில் நடப்பது இன அழிப்பு என்று சமீபத்தில் ஐநா அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த துயரத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உட்பட உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. காசாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. குழந்தைகளின் அழுகை, பட்டினி கிடக்கும் குழந்தைகளின் காட்சி, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையத்தின் இனப்படுகொலை அறிவிப்பு ஆகியவை எந்த மனிதனும் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாத துன்பத்தைக் காட்டுகின்றன.

இத்தகைய துயரத்தில் அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும்போது, மௌனம் காக்க கூடாது. ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழித்தெழ வேண்டும். இந்தியா உறுதியாகப் பேச வேண்டும், உலகம் ஒன்றுபட வேண்டும், இந்த கோரத்தை முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் செயல்பட வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications