காங்.அல்லாத மாநில கட்சிகள் கூட்டணி கரை சேராது- மமதா, கேசிஆருக்கு பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் பதிலடி!
காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முயற்சிளை தமது பிறந்த நாள் விழாவில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக நிராகரிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு வியூகத்துடன் களமிறங்கி வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான அல்லது காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணியைத்தான் ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது. அத்துடன் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக கடந்த தேர்தலில் முதன் முதலாக அறிவித்ததும் திமுகதான். அதனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி, ராகுல் பிரதமர் வேட்பாளர் என்ற முழக்கத்தை திமுக உறுதியாகவே ஆதரிக்கும்.

ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இருவருமே காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி அமைக்க முயற்சிகளை முன்னெடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று சந்தித்தார் சந்திரசேகர ராவ்.
இதேபோல் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் மாநில கட்சிகள் ஒருங்கிணைந்தாலே பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் என கூறி வருகிறார். இதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் மமதா பானர்ஜி. இன்னொரு பக்கம், காங்கிரஸை சேர்ப்பது தொடர்பாகவும் ஊசலாட்டமான நிலைப்பாட்டையும் மமதா பானர்ஜி வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில்தான் சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் குறித்து வெளிப்படையாகவே முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், வருகை தந்துள்ள அகில இந்தியத் தலைவர்கள் இந்த தகவல்களை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். அகில இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளமிடுங்கள். இப்போதே விதைப்போம். அடுத்த ஆண்டு மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அறுவடைக் காலமாக அமையும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவர்க்கும் ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து - விட்டுக் கொடுத்து - பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் - என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது என திட்டவட்டமாக கூறினார். அதாவது கேசிஆர், மமதா முன்னெடுக்கும் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி முயற்சியை திமுக ஆதரிக்காது என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications