சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாநிலத்தில் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? மூத்த அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தான் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்திருந்தது. இந்நிலையில் வெறும் 15 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் செம ஷாக்..வெறும் 15 நாட்களில் இரட்டிப்பான கொரோனா பரவல்.. உயரிழப்பும் 3 மடங்கு அதிகரிப்புதமிழகத்தில் செம ஷாக்..வெறும் 15 நாட்களில் இரட்டிப்பான கொரோனா பரவல்.. உயரிழப்பும் 3 மடங்கு அதிகரிப்பு

 புதிய அரசுக்கு பெரும் சவால்

புதிய அரசுக்கு பெரும் சவால்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது இன்னும் சில தினங்களில் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தியதாக ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 ஸ்டாலின் ஆலோசனை

ஸ்டாலின் ஆலோசனை

மேலும், ஸ்டாலின் தனது ட்விட்டரில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

 முக்கிய மாநிலங்களில் ரெம்சிவிர்

முக்கிய மாநிலங்களில் ரெம்சிவிர்

இக்கூட்டத்தின் போது, கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்குச் சென்னையில் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

 நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள்

நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள்

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் வென்றுள்ள திமுக, இன்னும் சில தினங்களில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Stalin conducts meeting with Top officials about Corona prevention activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X