ஜாக்டோ ஜியோ போராட்டம்.. திமுக முழு ஆதரவு அளிக்கும்.. ஸ்டாலின் அதிரடி!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஆபர்

    சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஜாக்டோ ஜியோ போராட்டம் உச்சமடைந்து இருக்கிறது. கடந்த 6 நாட்களாக ஜாக்டோ ஜியோ ஊழியர்களை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் போராடுகிறார்கள்.

    DMK chief Stalin supports Jacto Geo Protest

    தமிழக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் இவர்களின் இடத்தில் தற்காலிக பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

    ஸ்டாலின் இதுகுறித்து செய்திருக்கும் டிவிட்டில், நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையை ஏவி இரவோடு இரவாக கைது செய்வது அராஜகத்தின் உச்சகட்டம்!

    அவர்களை நேரில் அழைத்துப்பேசி சுமூக தீர்வுகாண முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இதில் என்ன கவுரவம்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    அதேபோல் ஸ்டாலின் இதுகுறித்து அளித்த பேட்டியில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் உடனடியாக அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.ஸ்டாலின் வலியுறுத்தல் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல் போராட்டத்தை தீவிரமாக்கியிருக்கிறது.

    போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு திமுக ஆதரவு அளித்து வருகிறது. அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆனால் அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை.

    திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்போம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+