மேசை மேல் ரிப்போர்ட்.. கண்கள் சிவந்த ஸ்டாலின்.. தேர்தல் கட்டுப்பாடு முடியட்டும்.. கச்சேரி இருக்கு?
சென்னை; 2024 லோக்சபா தேர்தலின் விதிகள் ஜூன் 4ம் தேதி முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுப்பார் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தேர்தல் திருவிழா நாளையோடு முடிவிற்கு வருகிறது. செவ்வாய் கிழமை தேர்தல் முடிவுகள் வர உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் பற்றி ஏகப்பட்ட கணிப்புகள், தோராயமான நம்பர்கள் ஏற்கனவே வர தொடங்கிவிட்டன.

நாளை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள் நடக்க உள்ளன. இந்த வாக்குப்பதிவுகள் முடிந்ததும் மாலையே எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகும். இந்த எக்சிட் போல் கணிப்புகள் கண்டிப்பாக தேர்தலின் முடிவுகளை வெளிக்காட்டும். ஓரளவிற்கு யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அதற்காக தீவிரமான ஏற்பாடுகளை, தயார் நிலைகளை ஆளும் திமுக செய்து வருகிறதாம். தேர்தல் முடிவுகளை மனதில் வைத்தே ஜூன் 1 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
முக்கியமான சில நடவடிக்கைகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலின் விதிகள் ஜூன் 4ம் தேதி முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுப்பார் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி முதல்வர் ஸ்டாலின் மேசைக்கு ஒரு முக்கியமான ரிப்போர்ட் சென்றுள்ளது. அதில் லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றிய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் லிஸ்ட் சென்றுள்ளது. மேலும் லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் லிஸ்ட் சென்றுள்ளது
இதெல்லாம் போக எதிர்கட்சிக்கு சப்போர்ட்டாக செயல்பட்ட அதிகாரிகள் லிஸ்ட் சென்றுள்ளது. அதன்படி சில போலீஸ் அதிகாரிகள், சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை பற்றிய புகார் சென்றுள்ளது. இவர்கள் எல்லோரும் அதிமுக, அல்லது பாஜகவிற்கு ஆதரவாக பணிகளை செய்துள்ளனர். ஆளும் திமுகவின் திட்டங்களை திமுகவிடம் இருந்து அதிமுக , பாஜகவிற்கு அனுப்பி உள்ளனர் என்று புகார் சென்றுள்ளதாம்.
என்னதான் அதிமுக ஆட்சி மாறினாலும் அதிமுக ஆதரவு அதிகாரிகள் சிலர் இன்னும் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாக திமுக தரப்பில் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இது லோக்சபா தேர்தலிலும் பட்டவர்த்தனமாக தெரிந்து உள்ளதாம்.
அப்படி இருக்க மாவட்ட செயலார்கள் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் அதை பற்றிய ரிப்போர்ட் சென்றுள்ளது. இப்படி பட்ட நிலையில்தான் எதிர் தரப்புக்கு கருப்பு ஆடாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள், சில ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களை கேட்டு முதல்வர் ஸ்டாலின் கோபம் ஆகி இருக்கிறாராம்.
இதனால் 2024 லோக்சபா தேர்தலின் விதிகள் ஜூன் 4ம் தேதி முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுப்பார் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இவர்களை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னிடம் கொடுக்கப்பட்ட லிஸ்டை வைத்து "சிலரை" தூக்கி அடிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications