அகில இந்திய வானொலி பெயர் ஆகாஷ்வாணி என மாற்றுவதா? திமுக கடும் கண்டனம்
சென்னை: அகில இந்திய வானொலியின் பெயரை ஆகாஷ்வாணி என இந்தியில் பெயர் மாற்றுவதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய வானொலி பெயரை ஆகாஷ்வாணி என பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றிலும், அலுவல் சார்ந்த கடிதங்களிலும் இனி ஆல் இந்தியா ரேடியோ என்ற பதத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்ற பதம் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு அதன் தலைமை அலுவலகத்தின் கொள்கைப்பிரிவு ஆணையிட்டுள்ளது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும்.
அகில இந்திய வானொலி தலைமை அலுவலகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆங்கிலச் செய்திகளில் ஆல் இந்திய ரேடியோ என்பதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் செய்திகளிலும் இன்று பிற்பகல் முதல் ஆகாஷ்வாணி என்ற பதம் பயன்படுத்தப்படவிருப்பதாக தெரிகிறது. இதை ஏற்க முடியாது என கூறியிருந்தார்.

மேலும் பிற மாநிலங்களிலும் அகில இந்திய வானொலி பெயரை மாற்றுவதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பட்டியலில் திமுகவும் இணைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
டி.ஆர்.பாலு எம்பி எழுதிய கடிதத்தில், அகில இந்திய வானொலியை 'ஆகாஷ்வாணி' என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவு தேவையில்லாத ஒன்று . தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில வானொலிகளில் அகில இந்திய வானொலி, ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலச் செய்திகளில் அகில இந்திய வானொலி என்றும், ஆங்கில செய்திகளில் ஆல் இந்தியா ரேடியோ என்றும் பயன்படுத்தப்படுகின்றன. வானொலி என்பது ஆகாஷ்வாணி என்ற வார்த்தையின் தமிழ் சொல்லே ஆகும் . இதை மாற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தேவையில்லாதவை. ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாட்டில் பொதுமக்கள் இடையேயும், அரசியல் கட்சியினர் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தலையிட்டு, முன்பிருந்த நிலையே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications