திமுக தலைமையில் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்... காணொலி மூலம் நிகழும் சந்திப்பு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் மருத்துவம் தொடர்பான விவகாரம் என்பதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவசியமில்லை என முதலமைச்சர் பதில் அளித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாததை அடுத்து திமுக அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 27-ம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசின் நிர்வாக தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என திமுக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் திமுக மூன்றாவது முறையாக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அனைத்துக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்துவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், தமிழக ஆளுநரை சந்தித்து முறையிடுவது தொடர்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications