திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை.. எங்க கட்சி விவகாரத்தை மத்தவங்க பேச வேண்டாம்! செல்வப்பெருந்தகை
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தில் தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தோழமை கட்சிகள் தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டும். இன்னும் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததில் இருந்து காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஏற்னகவே விஜய் கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றுவிடும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்ததும் இதற்கு காரணமாக அமைந்தது.

எனினும் ஆரம்பத்தில் இருந்தே தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்காது என்று தமிழக காங்கிரஸ் தரப்பில் சொல்லி வந்தது. அதற்கு ஏற்ப, காங்கிரஸ் கட்சி தலைமை தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்து இருந்தது. இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி கடன் அளவில் உத்தரபிரதேசத்தை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பேசினார். இந்த விஷயம் தமிழக அரசியலில் பூதாகரமானது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் நிர்வாகி இப்படி பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக கூறியது. இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தில் தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் காங்கிரஸ் எம்பி-க்களும் பிரவீன் சக்கரவர்த்தியை விமர்சித்த நிலையில் செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறியுள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்து விட்டதால் இந்த விவகாரத்தை இத்தோடு விட்டு விட வேண்டும். இது தான் ஆரோக்கியமாக இருக்கும். தோழமை கட்சிகள் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்னும் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இந்தியா கூட்டணி பலமாகவே இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதே போன்று ”காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தலையிட வேண்டாம் என்று அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். திருமாவளவன், வைகோ கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications