திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் கட்சி செல்லாது.. ராகுல் காந்தி எடுக்கும் முடிவு.. பின்னணி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலக மாட்டார்கள் என்று சொல்வதற்கு பல்வேறு காரணங்களை அரசியல் விமர்சகர்கள் அடுக்கி வருகின்றனர். 2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், அதற்கு தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

விக்கிரவாண்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய், எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதன் மூலமாக திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விலகுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் எந்தக் கட்சியும் இதுவரை விஜய்யுடன் கூட்டணி அமைக்க முன் வரவில்லை.

DMK - Congress Alliance

தவெக கட்டமைப்பு

ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டும் தொடர்ந்து சலசலப்பு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியினரும் விஜய்யுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இருப்பினும் தவெகவின் அடிப்படை கட்டமைப்பு மீது காங்கிரஸ் கட்சிக்கு சந்தேகம் உள்ளது.

காங்கிரஸ் தலைமை

இதனால் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பில் இருப்பவர்கள் பலரும் தவெக கூட்டணி ஒத்து வராது என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகும் என்ற தகவலை தவெக மற்றும் அதிமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விவரம் அறிந்தவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் எதிர்க்கட்சி பதவிக்கே காங்கிரஸ் கட்சியால் வர முடியவில்லை. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் இந்த முறை தான் சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. அதேபோல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட யாருமே ஏற்கவில்லை.

பிரதமர் வேட்பாளர்

ஆனால் தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் மட்டுமே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அங்கீகரித்து வந்திருக்கிறார். அதேபோல் லோக்சபா தேர்தல் முடிவடைந்து 2 ஆண்டுகளாகியும் எந்தக் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகவில்லை. ஏனென்றால் இந்தக் கூட்டணி இன்னும் 3 ஆண்டுகளுக்கு இணக்கமாக இருந்தால், நிச்சயமாக மத்தியில் ஆட்சிக்கு வர முடியும்.

காங்கிரஸ் கட்சி கூட்டணியை முறிக்குமா?

இப்படியான சூழலில் தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளையும் வென்று கொடுக்கும் திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்துக் கொள்ளும் என்ற வாதமே தவறு என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதை விடவும், மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியமான நோக்கம்.

ஆட்சியில் பங்கு

அதனை வெறும் 10 முதல் 15 சட்டசபைத் தொகுதிகளுக்காக இழக்க தயாராக இருக்காது. அதேபோல் தவெகவுடன் சென்று காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அவர்களின் திட்டம் என்ன என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. இதன் காரணமாகவே காங்கிரஸ் தலைமை ஆட்சியில் பங்கு என்ற விஷயத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+