திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்று உறுதியாகிறது.. மகிழ்ச்சியான செய்தி காலை வந்தது.. கோபண்ணா பேட்டி!
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி இன்று உறுதியாகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் - தவெக இடையிலான கூட்டணி உருவாக்கப்பட கடந்த 6 மாதங்களாக முயற்சிகள் நடந்ததாக கூறிய கோபண்ணா, அந்த முயற்சி வெற்றிகரமாக இன்று முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலில் ஆட்சியில் பங்கு என்று பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தற்போது, கூடுதல் தொகுதிகள் என்று பேச தொடங்கியுள்ளனர். திமுக - காங்கிரஸ் இடையில் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது திமுக 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்று கூறி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 41 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இதுதான் எங்களால் முடியும்.. இல்லையென்றால் உங்கள் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமுக தெளிவாக கூறிவிட்டது. இன்னொரு பக்கம் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேசி வந்தது.
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோ சந்திக்க உள்ளனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரிகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா பேசுகையில், நேற்று காலை டெல்லிக்கு வந்தேன். பல தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருக்கிறேன்.
12.30 மணிக்கு ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை இருவரும் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். இதன் மூலமாக கூட்டணி இறுதி வடிவம் பெறும். கூட்டணியும் உறுதி செய்யப்படும். மல்லிகார்ஜுன கார்கேவையும் நேற்று சந்தித்தேன். மல்லிகார்ஜுன கார்கே பின் பெங்களூர் சென்று ப.சிதம்பரம் உடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்புக்கு பலன் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக என்னை போன்ற காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தோம். தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் அப்படிதான் இருந்தோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சத்தில் இருந்தோம். மிகப்பெரிய மோசமான சூழலில், ப.சிதம்பரம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.
சோனியா காந்தியின் ஆதரவோடு, மல்லிகார்ஜுன கார்கே ஆதரவோடு, ராகுல் காந்தியின் ஆதரவோடு இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெற்றிக் கூட்டணியாக இருக்க போகிறது. இதில் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் முதல்வர் ஸ்டாலின். ஏனென்றால் அவரின் சகிப்புத்தன்மை. அதற்காக வாழ்த்துகிறேன். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெக.
நடிகை விஜய் ஒரு தலைவர்.. அதன்பின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா.. அப்படியொரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதா? அது தற்கொலைக்கு சமம் என்ற வேதனை இருந்தது. கடந்த 6 மாதங்களாக சதித்திட்டம் தீட்டி கூட்டணிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமை. இதுவரை பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லாத தவெகவுடன் எப்படி சேர முடியும்.. பாஜக எதிர்க்க துணிவில்லாத கட்சி தவெக. அவர்களுடன் கூட்டணி அமைக்க முயற்சி நடந்ததை அவமானகரமாக கருதினேன் என்று தெரிவித்துள்ளார்.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications