செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில் ஸ்டாலின்.. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆப்சென்ட்
சென்னை: தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் (DMK Congress Alliance) இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிக்கையை விட்டு அதிக எண்ணிக்கையில் சீட் கேட்டு காங்கிரஸ் அடம் பிடித்து வருகிறது. இதனால் கூட்டணி விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இல்ல விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றுள்ளார். ஆனால் சென்னையில் இருக்கும் கிரிஷ் சோடங்கர் பங்கேற்கவில்லை. பரபரப்பான அரசியல் சூழலில் ஸ்டாலினின் இந்த விசிட் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையினை காங்கிரஸ் முன்வைத்ததால் கூட்டணிக்குள் நெருடல் ஏற்பட்டுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, வடமாநிலங்களில் ஏற்பட்ட படிப்பினைகளை அடிப்படையாக கொண்டு முன்கூட்டியே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. இதற்காக கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்பட 5 பேர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் கடந்த நவம்பர் 3 ஆம் தேதியில் இருந்தே பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டு என வலியுறுத்தி வந்த நிலையில், திமுகவோ தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தான் குழு அமைக்கப்படும் என கூறியது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளிலும் எந்த விட உடன்பாடும் ஏற்படவில்லை.
29 + 2 தர சம்மதம்?
இறுதியாக 25 + 1 கொடுப்பதாக கிரிஷ் சோடங்கரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி 39 + 2 மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளில் 20 சதவீதம் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் தொடர்ந்து திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது. ஆனால் சோனியா காந்தி திமுக கூட்டணியும் இணையவே விருப்பம் தெரிவித்தார்.
இதனால் மீண்டும் இன்று ப சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். உடன் செல்வப்பெருந்தகையும் சென்று இருந்தார். ஆனாலும் திமுக 29 + 2 கொடுக்க சம்மதம் தெரிவித்தது என்றும் ஆனால் ராகுல் காந்தி 36 என்றால் சம்மதம் தெரிவிப்போம் என்று கூறியதாக தெரிகிறது.
தொடர்ந்து இழுபறி
இதனால் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போதும் செல்வப்பெருந்தகை திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தப்படவில்லை என்று கூறி வந்தார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை, தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். எங்களுக்கு திமுக எந்த கெடுவும் விதிக்கவில்லை என்று கூறினார்.
25 + 1 தான் காங்கிரசுக்கு வந்தால் வரட்டும், இல்லையெனில் போகட்டும் என்ற முடிவுக்கு திமுக வந்ததாகவே சொல்லப்பட்ட நிலையில் தான் இன்று செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறினார். திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரசில் உள்ள சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் செல்வப்பெருந்தகை மற்றும் சில எம்.எல்.ஏக்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கவே விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் திமுகவுடன் கூட்டணி வைக்காவிடில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபடும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் உதயநிதி பங்கேற்பு
இத்தகையை பரபரப்புக்கு மத்தியில் தான் செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்தம் சென்னை மகாபலிபுரத்தில் இன்று மாலை நடைபெற்றது. மகளின் நிச்சயதார்த்த நேரத்திலும் கூட செல்வப்பெருந்தகை காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்பாக சுமூக முடிவு வரவில்லை என்பதால் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து திரிந்து போராடி வந்தார்.
இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார். இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்டோரும் சென்றனர். கூட்டணி கட்சி தலைவர்களான இந்திய கம்யூனிஸ்ட் பெ சண்முகம், தேமுதிக எல் கே சுதீஷ், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். காலையில் நடந்த பரபரப்புக்கு மத்தியில் செல்வப்பெருந்தகை வீட்டு விழாவில் அனைவரும் கலகலப்பாக சிரித்து பேசிய வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி இருந்தது.
கிரிஷ் சோடங்கர் பங்கேற்கவில்லை
கூட்டணி இழுபறிக்கு நடுவிலும் செல்வப்பெருந்தகை வீட்டு நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. செல்வப்பெருந்தகை திமுக கூட்டணிக்கே ஆதரவாக இருக்கிறார் என்பதையே இந்த நிகழ்வு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
அதேநேரத்தில் சென்னையிலே இருந்தாலும் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. கூடுதல் சீட் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே விடாப்பிடியாய் நின்ற கிரிஷ் சோடங்கர் 25 தொகுதிகளை ஏற்க முடியாது என்று வெளிப்படையாகவே பேசியிருந்தார். இந்த சூழலில்தான், கிரிஷ் சோடங்கர் பங்கேற்காததும், ஸ்டாலின் பங்கேற்று இருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா?
இன்னொரு பக்கம் தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தது முதல் தற்போது எ.கே சுதீஷுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்கியிருப்பதையும் வைத்து பார்க்கும் போது காங்கிரசை கழட்டிவிடலா என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டதாகவும் பார்க்கப்படுகிறது.
காங்கிரசுக்கு 29 தொகுதிகள் கொடுக்கப்போவதாக அரசல் புரசலாக தகவல் வந்த போதே இவ்வளவு சீட் கொடுத்து அவர்களை தக்க வைக்க வேண்டாம் என திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கூறி வருவதாவும் சொல்லப்படுகிறது.
-
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications