திமுக - காங்கிரஸ் உறுதியான கூட்டணியா? கடைசி நேரத்தில் எல்லாம் மாறும்! தவெக நிர்மல் குமார்
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். மேலும் காங்கிரஸ் இல்லாவிட்டால் திமுகவால் 25 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்றும், அதிமுக, திமுகவில் கடைசி நேரத்தில் கூட கூட்டணி மாறலாம் என கூறியிருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதமே இருப்பதால் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடேறி வருகிறது. பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி
ஏற்கனவே சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டினை நிறைவு செய்துள்ள திமுக விசிக மற்றும் காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கேட்கும் சீட்டினை கொடுக்க திமுக முன் வரவில்லை என கூறப்படுகிறது. காங்கிரசுக்கு 25 தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் எதற்கும் தயார் என்ற வகையிலேயே ஸ்டாலினும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
நிர்மல் குமார் பேட்டி
இதனால் இந்த சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே காங்கிரசில் ஒரு சில நிர்வாகிகள் திமுகவுடன் தான் கூட்டணி வேண்டும் என சொல்கிறார்களாம். இன்னும் சில நிர்வாகிகள் விஜய் கட்சியுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்களாம்..
இதனால் காங்கிரஸ் திமுகவோடு கூட்டணி வைத்தாலும் அல்லது தவெகவுடன் கூட்டணி வைத்தாலும் காங்கிரசில் பிளவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சூழலில் தான் தவெக இணை பொது செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் திமுக 25 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று கூறினார்.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா?
நிர்மல்குமார் கூறுகையில், "திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி என்று கூற முடியாது. கடைசி நேரத்தில் கூட கூட்டணி மாறலாம். காங்கிரஸ் இல்லையென்றால் திமுக வெற்றி பெறாது.. திமுகவால் 25 இடங்களில் கூட வெற்றி பெறுவது கடினம்..
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு வருமா என்றால் காலம் தான் அதற்கு பதில் சொல்லும். இதேபோன்று தான் என்.டி.ஏ கூட்டணியிலும் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்.. அதிமுக - பாஜக கூட்டணியில் யார் தலைமை என்றே தெரியவில்லை.." என்று கூறினார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications