சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே! ஒரே பேச்சில் சோலியை முடித்த தளபதி! முண்டாசு கட்டி இறங்கிய காங்கிரஸ்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக காங்கிரஸ் கூட்டணி இறுதியாகுமா? என்ற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. 3000 ஓட்டுகள் கூட இல்லாத காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கு சீட்டு தரக்கூடாது என பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் மதுரை மாவட்ட திமுக செயலாளரான தளபதி. அதற்கு எதிர்வினையாக செல்வ பெருந்தகை ஜோதிமணி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் மீண்டும் குழப்பம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒரு ஆக்சன் படத்தின் கிளைமாக்ஸ் போல அடுத்து என்ன நடக்கும் என்பது தான் தற்போது தமிழக அரசியலில் கள நிலவரம் ஆக இருக்கிறது.
பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையே அதிமுக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஓரளவு முழுமை பெற்றிருக்கிறது. இரு துருவங்களாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி- டிடிவி தினகரன் சேர்ந்திருக்கின்றனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
மேலும் பாமக, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் சேர்ந்து இருக்கிறது. மறுபுறம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையாக இருந்த திமுக கூட்டணியில் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கி இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேச ஆரம்பித்த காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட ஆரம்பித்தது திமுக. இடையில் முதல்வர் ஸ்டாலின் ராகுல் பேச்சுவார்த்தையால் கூட்டணி உறுதி செய்யப்படுவது போல இருந்தது. இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்த ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தல்
வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் கிடைக்கும் என்பதால் திமுகவும் அதற்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் தான் நன்றாக சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியில் ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரத்தை சுட்டிக்காட்டி 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவான பாமக கூட்டணிக்கு வந்தால் விசிக இருக்காது என வெளிப்படையாக பேசி இருக்கிறார் திருமாவளவன். இத்தனை ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டுக் கொடுக்க திமுக தயாராக இல்லை.
திமுக காங்கிரஸ் மோதல்
இதனால் ராமதாசை கை கழுவ திமுக தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருக்க எண்டு கார்டு போடலாம் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது திமுக. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் சீட்டுகள் என பேசிய காங்கிரசை கூட்டணியில் இருந்து கழட்டிவிடும் முடிவுக்கு வந்ததாக ஏற்கனவே சொல்லியிருந்தோம் அல்லவா? பிறகு ராகுல் ஸ்டாலின் பேச்சு வார்த்தையால் மோதல்கள் முடிவுக்கு வந்தது. 20 முதல் 25 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு தர திமுக முன் வந்தது. அதே நேரத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தனர்.
கோ.தளபதி பேச்சு
அதனை பொதுவெளியில் போட்டு உடைத்து இருக்கிறார் திமுக மாநகர மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவும் ஆன கோ. தளபதி. நேற்று மதுரையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள்கூட்டத்தில் பேசிய அவர், 'காங்கிரஸ் கட்சிக்கு 3000 4000 ஓட்டுகள் இருக்குமா? அவர்களெல்லாம் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். மாணிக்கம் தாகூர் ஜோதிமணிக்கு யார் எம்எல்ஏ, எம்பி ஆனால் என்ன? அவர்களெல்லாம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள். வருகின்ற தேர்தலில் அவர்களுக்கு சீட்டு தரக்கூடாது' என பேசி இருந்தார்.
ஜோதிமணி பதிலடி
ராகுலின் சந்திப்புக்குப் பிறகு அமைதியாக இருந்த காங்கிரஸ் தலைவர்களை தளபதியின் பேச்சு உசுப்பேற்றிவிட உடனடியாக பதிலடி கொடுத்தார் கரூர் எம்பி ஜோதிமணி. " நான் கரூரில் இருக்கிறேன். நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அண்ணன் ஸ்டாலினுக்காக அனுசரித்துப் போகிறோம். இனியும் இப்படி பேசக்கூடாது" என கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து மாணிக்கம் தாகூரும் தனது பங்குக்கு தளபதிக்கு பதிலடி கொடுத்தார்.
இந்தியா கூட்டணி தமிழ்நாடு
இந்த நிலையில் நேற்று வரை பொறுமை காத்த செல்வ பெருந்தகை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கொந்தளித்து பதிவிட்டு இருக்கிறார். "பொதுவெளியில் கோ தளபதி கூட்டணி குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?" என அவரும் தன் பங்குக்கு விமர்சித்துள்ளார். பழம் கனிந்து பாலில் விழும் வேலையில் தளபதியின் பேச்சால் திமுக தலைமையே அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியல் பரபரப்பு
காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், தேசியக் கட்சி, ராகுலின் முகம், சிறுபான்மை மக்கள் ஆதரவு ஆகியவற்றிற்காக தான் காங்கிரஸ் கட்சியை உடன் வைத்திருக்கிறது திமுக. தற்போது தனது கட்சி தலைவர்களே அந்த கட்சியை விமர்சிப்பதும், அந்த கட்சி பதிலடி கொடுப்பதும் என கூட்டணிக்குள்ளே குழப்பம் வந்திருப்பதை விரும்பாத திமுக தலைமை இதற்கு முடிவு கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இத்தனை ஆண்டுகள் வலிமையாக இருந்த திமுக கூட்டணியில் முட்டல் மோதல் என தொடங்கி இருப்பதால் அதிமுக பாஜக கூட்டணி குஷியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications