Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் கேட்டது 39+2! திமுக கொடுத்தது 25+1? கே.சி.வேணுகோபாலிடம் கறார் காட்டினாரா ஸ்டாலின்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக சொல்லப்படும் நிலையில் 25 சட்டசபை தொகுதிகளும், ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அரசியல் பார்வையாளர்கள் தங்களுக்கு கிடைத்த தகவலை தெரிவித்து வருகிறார்கள்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவும் காங்கிரஸும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களாக இரு கட்சிகளிடையே ஏற்பட்ட சிறு இழுபறி நிலைக்கு பிறகு, நேற்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசியபோது, முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பு சுமூகமாக நடந்ததாகவும், ஆனால் இறுதி முடிவுகளுக்கு இன்னும் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

tamil nadu assembly election 2026 dmk congress 2026

பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், கே.சி. வேணுகோபால், கனிமொழி, சிங் தியோ ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கை குறித்து இன்னும் உறுதியான ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை காங்கிரஸ் மேலும் கூடுதல் தொகுதிகளை அதாவது 39 தொகுதிகளை எதிர்பார்க்கிறது என்கிறார்கள். அத்துடன் இரு ராஜ்யசபா சீட்டையும் கேட்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் முதல்வர் ஸ்டாலினோ 25 சட்டசபை தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுப்பதாக கறாராக தெரிவித்துவிட்டாராம். மேலும், திமுக சுமார் 167-170 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதால், மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை) இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை உள்ளதால் காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்துவிட்டாராம்.

சமீபத்தில் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்ததால், தொகுதி பங்கீடு இன்னும் சிக்கலாகியுள்ளது. தங்களுக்கு நல்லதொரு எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி என பிரேமலதா தெரிவித்திருந்தார். அப்படியிருக்கும் போது ஓரளவுக்கு எத்தனை சீட் என்பதை திமுக தலைமையிடம் பேசியிருப்பார். எனினும் ஸ்டாலின் கறார் காட்ட முக்கிய காரணமாக காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு கோரிய சில கருத்துகள் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோரால் திமுகவை எரிச்சலடையச் செய்தன என்கிறார்கள்.

இருப்பினும், இரு கட்சிகளின் தலைமையும் கூட்டணியை தக்க வைக்க விரும்புவதால், பேச்சுவார்த்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஏற்கெனவே தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்து IUML உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.

காங்கிரஸுடனான இறுதி ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் எட்டப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது இந்த 25 தொகுதிகளை விட ஓரிரு தொகுதிகள் கூட வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஸ்டாலினோ 25-க்கு மேல் கேட்காதீர்கள் என கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த முறை ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டாம் என காங்கிரஸ் தலைமை, கே.சி.வேணுகோபாலிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஒரு வேளை திமுக 25 -க்கு மேல் தொகுதிகளை கூட்டாவிட்டால் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி அமைக்க சோனியா காந்தியும் ராகுலும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+