இனிதான் பனையூர் தலைவருக்கு சிக்கலே.. அதுவிடுங்க எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக "சைலண்ட்" குட்டு: பிரபலம்
சென்னை: ஒரு விஷயத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறபோதே, ஏதோ தவறான சம்பவம் நடந்துள்ளது என்றுதானே அர்த்தம்? தவறு செய்தவர்கள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.. தற்போது உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்திருக்கிறது. இதுல எங்கிருந்து தப்பிக்கிறது? என்று திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கருத்து கூறியிருக்கிறார்.
நேற்றைய தினம் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, உச்ச நீதிமன்றம் கரூர் பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம், நாங்களும் இதை எங்களின் கோரிக்கையாக வைத்திருந்தோம்.

மாநில அரசு மீது சந்தேகம்
கரூரில் நடந்ததை விபத்து என ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசும்போது நடந்ததாக கூறப்படும் பல்வேறு விஷயங்கள் மிகப்பெரிய சந்தேகத்தை மாநில அரசின் மீது உருவாக்கி இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது இன்னும் ஸ்ட்ராங்கான ஆட்கள் வரப்போகிறார்கள்.. ஸ்ட்ராங்கான ஆட்கள் என்றால் அது விஜய்யா என்று கேட்டால், நீங்கள் ஸ்ட்ராங்கான ஆள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
இந்நிலையில், Liberty Tamil என்ற யூடியூப் சேனலுக்கு திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
அதில், "சிபிஐ வரக்கூடாது என்று திமுக உச்சநீதிமன்றத்தில் வாதிடவில்லை.. அதேபோல தமிழக அரசும் எங்கேயும் வாதிடவில்லை.. ஆனால் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை திமுக சொல்லி உள்ளது..
"இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது" என்று பராசக்தி படத்தில் கலைஞர் ஒரு வசனம் எழுதியிருப்பார், ஆனால், இப்போது சொல்கிறேன், நீதிமன்றம் பல விசித்திர தீர்ப்புகளையும் தந்திருக்கிறது..
பனையூர் பதிலடி
தமிழ்நாட்டில் விசாரித்தாலாவது, விஜய் சற்று பிரபலமானவர் என்பதால், மரியாதையாக நடத்துவார்கள்.. ஆனால், விசாரணை இப்போது அங்கே போயாச்சு..
இது தெரியாமல், தவெக தரப்பில் வெற்றி என்று கொண்டாடுகிறார்கள்.. ஆனால், இதிலுள்ள அரசியல் இப்போது தெரியாது.. வெற்றி என்று கொண்டாடுவதற்கு இதில் என்ன இருக்கிறது? விஜய்யை குற்றமற்றவர் என்று தீர்ப்பு சொல்லிட்டாங்களா? இது அது சம்பந்தமான தீர்ப்பு கிடையாதுதானே?
ஒரு விஷயத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறபோதே, ஏதோ தவறான சம்பவம் நடந்துள்ளது என்றுதானே அர்த்தம்? தவறு செய்தவர்கள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.. தற்போது உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்திருக்கிறது. இதுல எங்கிருந்து தப்பிக்கிறது?
இதுவரையாவது பனையூரில் இருந்துட்டு பதில் சொல்ல வேண்டியிருந்தது.. இனிமேல் எங்கே போய், எப்படி வரணும் என்ற காரியம் தெரியும், அதை காலம் பதில் சொல்லும்..
வானதி சீனிவாசன்
என்டிஏ கூட்டணி வலுவாக போகிறது, வலுவானவர் எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறார் என்று வானதி சீனிவாசன் கூறுகிறார்.
ஸ்ட்ராங்கான நபர் வரப்போகிறார் என்றால், இப்போதுள்ளவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தம்.. இது கூட்டணியிலுள்ளவர்களை பின்னங்காலில் உதைத்ததுபோல இருக்கே? இது அந்த கூட்டணி தலைவர்களுக்கு வெட்கத்தையே தந்துள்ளது..
ஸ்ட்ராங் தலைவர்
பாஜக என்பது 1984 முதல் இருக்கின்ற கட்சியாகும்.. அதிமுக என்பது 1972 லிருந்தே உள்ள கட்சியாகும்.. இப்படி வருட கணக்கில் அனுபவத்தை வைத்து கொண்டு, வரப்போகிறவர் ஸ்ட்ராங்கான நபர் என்று பேசுவது நல்லா இருக்கா?
திமுகவில் உள்ளவர்கள் ஒருபோதும், இன்னொரு கட்சிதலைவரை ஸ்ட்ராங்க் தலைவர் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்.. பீரங்கியை எங்கள் முன்பு நிப்பாட்டினாலும், எங்கள் தலைவனே ஸ்ட்ராங் என்று சொல்வோம்.
பொதுவாக, தலைவர்களை பாராட்டி பேசலாம். அதுக்காக வரப்போகிறவர்தான் ஸ்ட்ராங் என்றால்? இந்த வார்த்தை, எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தலையை லேசாக தட்டியது போல உள்ளது. எனவே ஸ்ட்ராங் லீடர் யாரென்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்கிறார்.
-
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம்! நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு.. தவெகவுக்கு சவால்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!











Click it and Unblock the Notifications