களத்தில் நிக்கணும்! கால்வாயில் இறங்கி அடைப்பை எடுத்த திமுக கவுன்சிலர்! மலைக்க வைத்த மலைச்சாமி
சென்னை; சென்னை மாநகராட்சி 36 வது வார்டு திமுக கவுன்சிலர் மலைச்சாமி இந்திரா காந்தி நகர் கால்வாயில இறங்கி அடைப்புகளை எடுக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.
ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
மீளும் சென்னை: மேலும் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.

இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.
டிரெண்டான கவுன்சிலர்: சென்னை மாநகராட்சி 36 வது வார்டு திமுக கவுன்சிலர் மலைச்சாமி இந்திரா காந்தி நகர் கால்வாயில இறங்கி அடைப்புகளை எடுக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. இவர் மக்களோடு மக்களாக களமிறங்கி மீட்பு பணிகளை செய்தார்.
கழுத்து வரைக்கும் இருக்கும் கால்வாயில் இறங்கி அடைப்புகளை எடுத்தார். அவர் அடைப்புகளை எடுத்த விதம், அதற்காக செய்த பணிகள் அப்பகுதி மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. பல கவுன்சிலர்கள் இது போன்ற நேரங்களில் காணாமல் போகும் போது.. இவரோ களத்தில் மக்களோடு மக்களாக நின்று பணிகளை செய்து வருகிறார்.
அவரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் இடையே பெரிய அளவில் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்படி ஒரு கவுன்சிலராக.. மக்களுக்காக துணை நிற்கும் கவுன்சிலரா.. இவரை போன்றவர்கள்தான் தேவை என்று மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications