ஆளுநருக்கு 'செக்'.. ஆர்.என்.ரவி சொன்ன லா பாயிண்டை மத்திய அமைச்சரின் பதில் மூலமாகவே உடைத்த திமுக!
சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு டெல்லியில் இருந்து செக் வைத்துள்ளது திமுக. மத்திய அமைச்சரே, ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, ஆளுநரை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
சேலம் திமுக எம்.பி பார்த்திபன், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அளித்துள்ள பதில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிராக உள்ளது. இதனை குறிப்பிட்டு திமுகவினர் பேசி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டம்
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பல மாத பரிசீலனைக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே சமீபத்தில் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனத் தெரிவித்திருந்தது ஆளுநர் மாளிகை. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்துள்ள பதிலில் அத்தகைய சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தடை மசோதா
ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்து, நிம்மதியை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுவரை தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து கடனாளிகளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் விளக்கம் கேட்டு அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதனையடுத்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு இந்த சட்ட மசோதாவை மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் கூறியிருந்தார்.

திமுக எம்.பி கேள்வி
ஆளுநரின் இந்த முடிவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில், ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறைவேற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதிகாரம் உள்ளது - மத்திய அமைச்சர்
அவரது கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவை அரசமைப்பின் 7-வது அட்டவணையின் பட்டியல் 2ல் வருகிறது. அவை மாநில அதிகாரத்தின் கீழ் வருபவை, எனவே இதைத் தடுப்பது மாநில அதிகார வரம்பின் கீழ் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய அரசே சொல்லிடுச்சே
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அமைச்சரே, சூதாட்டம் மாநில அதிகாரத்தின் கீழ் வருவது என்றும், அதை தடுப்பது மாநில அதிகார வரம்பின் கீழ் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளதால், ஆளுநரின் கருத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.ஆர்.பார்த்திபன்
இதுதொடர்பாகப் பேசியுள்ள திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், "தமிழ்நாட்டில் 40க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டங்களால் வாழ்வை இழந்துள்ளனர். பாமர மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. ஆளுநர் 150 நாட்கள் அதை பரிசீலிக்காமல் வைத்திருந்துவிட்டு, மாநில அரசுக்கு இதற்கு அதிகாரம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்புகிறார்.

ஆளுநர் இப்படி
சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு, தடை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என மசோதாவை தொடர்ந்து திருப்பி அனுப்பி வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு கோபித்துக்கொள்ளும் என்ற பயத்தில் இருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications