2 ஏக்கர் இலவச நிலம் என்னாச்சு...பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுகிறது திமுக - எல்.முருகன் பொளேர்
மக்களை ஏமாற்றுவது எப்படி என்பதை திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: திமுக அறிவிப்பு எல்லாம் ஏமாற்று வேலை என்று பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். திமுக அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருவதாகவும் முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் படுபரபரப்பாக உள்ளது. திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தியுள்ளது திமுக. திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதில் முக்கியமாக ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஸ்டாலின் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

காப்பி அடித்தாரா ஸ்டாலின்
1000 ரூபாய் அறிவிப்புதான் இப்போது விவாதப்பொருளாகியுள்ளது. மநீமா ஏற்கனவே இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் தரப்போவதாக அறிவித்துள்ளது. அதே போல ஸ்டாலினும் அறிவிக்கவே நாங்கள் சொன்னதை காப்பி அடித்து விட்டார் என்று கூறி விமர்சனம் செய்தார் கமல்ஹாசன்.

திமுகவின் விசன் 7 திட்டம்
ஸ்டாலின் அறிவிப்புகள் குறித்து சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திமுக அறிவிப்பு எல்லாம் ஏமாற்று வேலை என்று கூறினார். மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என ஸ்டாலின் கூறி வருவதாகவும் விமர்சனம் செய்தார்.

பொய்யான வாக்குறுதிகள்
திமுக அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது என்று கூறிய எல். முருகன், விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார். கடந்த லோக்சபா தேர்தலின் போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை நம்பி பலரும் ஏமாந்து விட்டனர். மத்தியில் ஆட்சிக்கு வர முடியாத திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஏமாற்றும் திமுக
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தரப்படும் என்ற அறிவிப்பை எப்படி நிறைவேற்றுவார் என்று கேட்ட முருகன், பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுப்பதாகவும் ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications