மாநிலங்களவை தேர்தல்.. வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை.. சொன்னபடி மநீம கட்சிக்கு கொடுத்த திமுக!
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் திமுக தரப்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டு திமுக தரப்பில் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சீனியர் என்ற அடிப்படையில் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. மநீம கட்சிக்கு அளித்த உறுதி காரணமாக, கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் திமுக தரப்பில் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான விருப்பத்தையும் அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பி.வில்சனுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் கவிஞர் சல்மா மற்றும் சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுதி அளித்தபடி, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக உடனான ஒப்பந்தப்படி ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு மாநிலங்களவை இடமும் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.
அதன்படி திமுக வைகோவை மாநிலங்களவைக்கு தேர்வு செய்து அனுப்பியது. ஏற்கனவே 1978 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினரான வைகோ பணியாற்றி உள்ளார். தற்போது 3வது முறையாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இதன் மூலம் அவரின் நாடாளுமன்ற பயணம் முடிவுக்கு வருவதாக பார்க்கப்படுகிறது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications