ரூ.2,000 டூ 1 லட்சம் ரூபாய் வரை.. நிர்வாகிகளை வெயிட்டாக கவனிக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள்!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கிளைக்கழகம் முதல் ஒன்றியம், நகரம் என கட்சி நிர்வாகிகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை பரிசு கொடுத்து கணமாக கவனித்திருக்கிறார்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள்.
அதிலும் குறிப்பாக மாவட்டச் செயலாளர், அமைச்சர், என இரண்டு பதவிகளில் இருப்பவர்கள் தீபாவாளி பரிசு விவகாரத்தில் சற்று தாராளம் காட்டியிருக்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் வழங்கும் தீபாவாளி பரிசையொட்டி திமுக உடன்பிறப்புகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

தீபாவளி பண்டிகை
திமுகவில் நிர்வாகிகள் வகிக்கும் பதவிக்கேற்ப தீபாவாளி பரிசுப் பொருட்களை ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள். கிளைக்கழக நிர்வாகிகள் என்றால் ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸ் மற்றும் ரூ.2,000 பணம் என்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு ரூ. 1லட்சம் தீபாவாளி பரிசு என்றும் ஃபிக்ஸ் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டச் செயலாளர் பதவி மட்டுமல்லாமல் அமைச்சர் பதவியிலும் இருப்பவர்கள் இந்த விவகாரத்தில் இந்தாண்டு சற்று கூடுதல் தாராளம் காட்டியிருக்கிறார்கள்.

கஞ்சத்தனம் வேண்டாம்
இதற்கெல்லாம் காரணம் கட்சித் தலைமைதானாம். கஞ்சத்தனம் செய்யாமல் கஷ்டப்படும் நிர்வாகிகள் மன மகிழ்ச்சியோடு தீபாவளி கொண்டாடும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மேலிடம் தந்த அறிவுறுத்தலின் காரணமாகவே தாராள பிரபுக்களாக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மாறியிருக்கிறார்கள். கொங்கு மண்டல எல்லை மாவட்ட அமைச்சர் ஒருவர் 2 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு கணமாக கவனித்து நிர்வாகிகளை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

அமைச்சர்கள் தாராளம்
இதேபோல் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் ஏகத்துக்கும் தீபாவளி பரிசுகளை கட்சிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம். இதனால் மனம் குளிர்ந்து போன திமுக நிர்வாகிகள் எங்க அமைச்சரை போல் வருமா என சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு பெருமை பேச ஆரம்பித்துள்ளார்கள். திமுகவுக்கு இணையாக இல்லையென்றாலும் அதிமுகவிலும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தீபாவாளி பரிசு விவகாரத்தில் தாராளம் காட்டியிருக்கின்றனர்.

அரசியல் கட்சி நிர்வாகிகள்
அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பொறுத்தவரை கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி தனது தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் கிஃப்ட்களை அள்ளிக்கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார். மொத்தத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கவலையின்றி கொண்டாடத் தயாராகிவிட்டார்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications