அண்ணா அறிவாலயத்திலிருந்து வந்த உத்தரவு! மண்டை காயும் திமுக மாவட்டச் செயலாளர்கள்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமைக் கழகம் புது அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்துள்ளது.
வரும் 8ஆம் தேதி அன்று மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை திமுக மாவட்டச் செயலாளர்கள் தான் செய்திட வேண்டுமென தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதே 8ஆம் தேதி அன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச் சின்னம் அணிந்து திமுக எம்.பி.க்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இது தொடர்பான அறிவிப்பு வருமாறு;
'' மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, மாநில உரிமைகள் காத்திட ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 2024 பிப்ரவரி-8 (வியாழக்கிழமை) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் "கண்டன ஆர்ப்பாட்டத்தில்", கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு எதிராக தமது கண்டனக் குரலை எழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ''
''இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், தத்தமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென மாவட்டக் கழகச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications