ஜூன் 1ல் மதுரையில் திமுக பொதுக் குழு கூட்டம்! மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் மதுரையில் நடைபெறும் என இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கலைஞர் அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில், சென்னை கலைஞர் அரங்கில் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து 1,244 இடங்களில் கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது போல் ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் மதுரையில் நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications