நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. அப்போது மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
புதியவர்களுக்கு எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும், எத்தனை வாரிசுகள், ஏற்கெனவே சிட்டிங் எம்பியாக உள்ளவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு போன்றவை எல்லாம் நாளை தெரியவரும்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. சேலம், தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், தஞ்சை, தென்காசி, தூத்துக்குடி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆரணி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது
21 தொகுதிகளுக்கும் திமுக வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப் போகும் நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications