அதிமுகவுக்கு போட்டி.. அதே நாளில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! முக்கிய முடிவெடுக்கும் ஸ்டாலின்!
சென்னை: வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-08-2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள். இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில் திமுக முப்பெரும் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. திமுக முப்பெரும் விழாவை திமுக தொண்டர்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்த நிகழ்வாகப் பார்க்கின்றனர். இந்த முப்பெரும் விழாவை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுத்து அறிக்க இந்த மா.செக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதே நாளில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை கழக எம்.ஜி.ஆர் மாளிகையில் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications