Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DMK-DMDK alliance: திமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது! தேதி குறிச்சாச்சு! எத்தனை தொகுதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக- தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என தகவல்கள் கூருகின்றன. அது போல் எத்தனை தொகுதிகளில் தேமுதிக போட்டியிட போகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த கூட்டணி குறித்து அறிந்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ்ஸின் அதொஉமீக, தேமுதிக, ராமதாஸ் பாமக ஆகியவை இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் இருக்கின்றன.

dmk dmdk premalatha

இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை பொருத்தமட்டில் அவரை அதிமுக கூட்டணியில் இழுக்க பாஜக, டிடிவி தினகரன் முயற்சித்தனர். ஆனால் அது முடியவில்லை. இந்த நிலையில் திமுகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன.

ஓபிஎஸ்

அதில் ஓபிஎஸ்ஸை திமுகவில் சேர்ப்பது அல்லது ஓபிஎஸ்ஸை திமுகவுடன் கூட்டணிக்கு கொண்டு வருவது என பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவை பொருத்தமட்டில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுடனும் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

தவெக விஜய்

இடையே தவெக விஜய்யை விஜய பிரபாகரன் அண்ணன் என அழைத்ததால் ஒரு தேமுதிக, தவெகவுடன் கூட்டணிக்குச் செல்லுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் கூட்டணி குறித்து பொங்கலுக்கு அறிவிப்பதாக சொன்ன பிரேமலதா அறிவிக்கவில்லை. கடலூர் மாநாட்டில் சொல்வதாக கூறினார், அப்போதும் அவர் அறிவிக்கவில்லை.

கடந்த 3 ஆம் தேதி தலைமை கழகத்தில் அறிவிப்பை வெளியிடுவதாக சொல்லியிருந்தார். அப்போது அவர் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. இதனால் தேமுதிகவினரே சோர்ந்து விட்டனர். அவர்களை சமாதானப்படுத்த தற்போது தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவோர் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரேமலதா சப்பைக் கட்டு கட்டி வருகிறார்.

பிரேமலதா விஜயகாந்த்

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக 14 தொகுதிகளையும் 1 ராஜ்யசபா சீட்டையும் கேட்டு வருகிறது. ஆனால் திமுக 14 தொகுதிகளை கொடுக்க மறுப்பதாக தெரிகிறது.

திமுகவால் 7 தொகுதிகளை ஒதுக்க முடியும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை குறித்து திமுகவை சேர்ந்த முக்கய நிர்வாகி கூறியிருப்பதாவது: தேமுதிக 14 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுள்ளது.

7 தொகுதிகள்தான் கன்பார்ம்!

ஆனால் நாங்கள் 7 தொகுதிகளை கொடுக்கிறோம் என சொல்லி இருக்கிறோம். ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக பேசியிருக்கிறோம். இனி தேமுதிகதான் முடிவு எடுக்க வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தேமுதிகவின் நிலைப்பாடு தெரியவரும் என அந்த நிர்வாகி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 14 தொகுதிகள் கேட்டுவிட்டு தற்போது வெறும் 7 தொகுதிகளுக்கு தேமுதிக எப்படி ஒப்புக் கொண்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

2005 ஆம் ஆண்டு தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியது முதல், அக்கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. முதல்முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அதில் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிக அமர்ந்தது. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சட்டசபையில் மோதல் போக்கால் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது. இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி மீண்டும் அமைத்தது. ஆனால் அப்போது தேமுதிக சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை ஏன்?

இந்த நிலையில் 2021, 2024 ஆகிய தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. தற்போது முதல்முறையாக திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தேமுதிக வட்டாரங்கள் சிலரிடம் கேட்ட போது, அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்களுக்கு பிடிப்பில்லை. அந்த கூட்டணியில் இணைந்தால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி செல்லலாம் என தெரிவித்திருந்தோம். திமுக கூட்டணியில் சீட் குறைவு என்றாலும் வெற்றி பெறலாம், கட்சியின் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொள்ளலாம். ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். எனவே இதுதான் நல்ல நிலைப்பாடு என தெரிவித்தோம். அதன்படி கட்சி தலைமையும் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+