தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தது. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. இன்று மாலை தொகுதிகள் விவரங்களை அறிவிக்க உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

2026 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இணைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கியது திமுக. இதையடுத்து, தேமுதிகவின் பொருளாளர் எல்.கே. சுதீஷ், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு 10 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை பங்கீடு நிறைவடைந்து தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பங்கீடு நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை தொகுதிகள் பங்கீடு இறுதி செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் கட்சி வாரியாக போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவாலயத்திற்கு வந்தார். அப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 10 தொகுதிகள் தொடர்பான பட்டியலை அவர் டி.ஆர் பாலுவிடம் அவர் கொடுத்தார். அந்த பட்டியலில் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் நிலையில், பிரேமலதா ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளான விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை, தேமுதிக போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளார் ஸ்டாலின்.
திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இன்று மாலை, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் சுதீஷ், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று கடைசி கட்டமாக நடைபெற்ற தொகுதிகள் பங்கீடு சுமூகமாக முடிந்தது என்றும் தொகுதி விவரங்களை இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications