அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் இம்முறை திமுக ஓட்டை போடும் என்று Poll Tracker நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ள Poll Tracker நிறுவனம், கொங்கு மண்டலத்தில் கடந்த முறையை விடவும் கூடுதல் தொகுதிகளில் திமுக வெல்லும் என்றும் கணித்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 21 நாட்களே இருக்கும் சூழலில், திமுகவினர் பம்பரமாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் என்று தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக Poll Tracker நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

DMK

Poll Tracker நிறுவன கருத்துக்கணிப்பின்படி திமுக கூட்டணி 172 முதல் 178 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 46 முதல் 52 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யின் தவெக 6 முதல் 12 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும், நாதக 2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தில் திமுக இம்முறை கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இருக்கும் 68 தொகுதிகளில் அதிமுக கூட்டணி மொத்தமாக 43 தொகுதிகளை கைப்பற்றியது. அதிலும் கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. இதனால் கோவையில் சரிபாதி தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக குறியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் செந்தில் பாலாஜி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதற்கேற்ப கொங்கு மண்டலத்தில் திமுக கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லோக் போல் நிறுவன கருத்துக் கணிப்பிலும் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருந்த சூழலில், தற்போது Poll Tracker நிறுவனம் கருத்துக்கணிப்பிலும் திமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+