விஜய் பேச்சில் எதையும் நீக்க முடியாது.. அறிவித்த சபாநாயகர்.. அமளியில் ஈடுபட்ட திமுக வெளியேற்றம்!
சென்னை: சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டு திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய்யின் பேச்சில் இருந்த அமலாக்கத்துறை ஆவண தகவல், சர்க்காரியா கமிஷன், மிசா விவகாரம் மற்றும் முரசொலி மாறன் பற்றிய விஷயங்களை நீக்க முடியாது என்று ஜேசிடி பிரபாகர் நீக்க முடியாது என்று கூறியதால், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் முதல்வர் விஜய் நேற்று பேசியதில் இருந்து சர்க்காரியா கமிஷன் தொடர்பான வார்த்தைகள், மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது தொடர்பான விவகாரங்கள், முரசொலி மாறன் தொடர்பானவை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள அமலாக்கத்துறை ஆவணங்கள் பற்றிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று திமுக கொறடா எவ வேலு வேண்டுகோள் வைத்தார்.

இதன்பின் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பதில் அளித்தனர். இதனை கண்டித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதல்வர் விஜய் பேசிய வார்த்தைகள் அனைத்தும் பொதுவெளியில் இருப்பதை தான். அதனால் விஜய் பேசியதில் இருந்து ஒரு வார்த்தையை கூட நீக்க முடியாது என்று அறிவித்தார்.
இதனால் திமுக உறுப்பினர்கள் மொத்தமாக சபாநாயகர் இருக்கை முன் திரண்டு கோஷம் எழுப்பினர். அப்போது சபாநாயகர், திமுக சார்பாக எவ வேலு பேசுவதற்கு அனுமதி அளிக்கிறேன்.. நீங்கள் உங்களின் இடங்களுக்கு செல்லுங்கள் என்றார். ஆனால் திமுகவினர் தொடர்ச்சியாக சபாநாயகர் தீர்ப்புக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது எழுந்த செங்கோட்டையன், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதன்பின் காவலர்களை அழைத்த சபாநாயகர், உடனடியாக திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டசபை காவலர்கள் திமுகவினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இதனால் சட்டசபை பரபரப்பாகியது.
தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அவையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என்று உள்நோக்கம் திமுகவினருக்கு இருக்கிறது. அவையின் மாண்பை குலைத்ததால் அவர்களை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் அது தவறு என்று நான் கருதவில்லை என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
