Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட மாவட்டங்களில் ஏறி வரும் திமுக.. எடப்பாடி திட்டத்தை தேமுதிகவை வைத்து முடிக்கும் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே தேமுதிகவை தங்களின் கூட்டணிக்குள் திமுக கொண்டு வந்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். வன்னியர்கள் வாக்குகள் திமுக பக்கம் வரும் என்றாலும், அதிமுக - பாமக கூட்டணி பெறும் அளவிற்கு கிடைக்காது என்றும், அதனால் வன்னியர்களுக்கு எதிரான வாக்கு வங்கியை முழுமையாக அறுவடை செய்ய திமுக தயாராகி இருக்கிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக உடன் முதல்முறையாக தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வந்ததற்கு நாயுடு சமூக வாக்கு வங்கி, தென் மாவட்டங்களில் இருக்கும் மக்களின் ஆதரவு உள்ளிட்டவை காரணமாக சொல்லப்படுகின்றன. ஆனால் திமுக தலைமையின் இந்த மூவ் விவரம் அறிந்த பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

DMK

அதாவது தேமுதிகவின் வாக்கு வங்கி தென் மாவட்டங்களை விடவும் வட மாவட்டங்களில் கணிசமாக உள்ளது. இதன் காரணமாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தனது சொந்த ஊரில் போட்டியிடாமல் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டார். இதன் மூலமாக பாமகவின் எதிர்ப்பு வாக்குகளை தேமுதிக அறுவடை செய்தது.

கடந்த முறை வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை அறிவித்து வட மாவட்டங்களில் அதிமுக - பாமக கூட்டணி ஆதிக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தினார். அது ஓரளவிற்கு அதிமுகவுக்கு கைகொடுத்தது. இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்ததால் திமுக அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அள்ளியது. இம்முறையும் அதிமுகவுடன் அன்புமணி கைகோர்த்துள்ளார்.

இதனால் சென்னை முதல் விழுப்புரம் வரையிலான பெரும்பாலான வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாகவே ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணிக்குள் கொண்டு முயற்சியை திமுக எடுக்கவில்லை. ஏனென்றால் ராமதாஸ் உள்ளே கொண்டு வரப்பட்டால், தலித் மக்களின் ஆதரவு முழுமையாக பறிபோகும்.

இதனால் திமுக தலைமை வன்னியர்களுக்கு எதிர்ப்பு வாக்கு வங்கியை மொத்தமாக சேர்க்க திட்டமிட்டது. அந்த வகையில் தேமுதிக வெற்றிபெற்ற தேர்தல்களில் எல்லாம், பாமக உடன் அக்கட்சி கூட்டணியில் இல்லை. அதேபோல் திமுக எடுத்த சில சர்வேக்களிலும் விவரமாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே விசிக கூட்டணியில் இருப்பதால், தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை சில மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டனர்.

அதற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தி வட மாவட்டங்களில் திமுக வெல்வதற்கான வியூகங்களை கச்சிதமாக முடித்துள்ளது. அண்மையில் கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டிலும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+