“தேர்தல் முடிவுகளில் தவெக ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம்”.. திமுக அணியில் இருக்கும் வைகோ சொல்வதை பாருங்க!
சென்னை: தவெக, தமிழக சட்டசபை தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கூறி வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜயின் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. தவெகவின் வருகை, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடும் போட்டியாக மாறியுள்ளது. தமிழ்நாடு அரசியல் களம் தற்போது வலுவான மும்முனை போட்டியை கண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன் விஜய்யை பார்க்க மட்டுமே கூட்டும் கூடுகிறது என்றும், அது பெரிதாக ஓட்டாக மாறாது என்றும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி, தவெகவுக்கு பெரியளவில் பூஸ்ட் கொடுத்துள்ளன. கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை தவெகவுக்கு 15 சீட் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஆக்ஸிஸ் - மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 120 இடங்கள் வரை தனிப் பெரும்பான்மையாக வெற்றிபெறும் எனக் கணித்துள்ளது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு, முன்னணி கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சர்யம் கொடுத்துள்ளது.
பெரும்பாலான ஊடக கணிப்புகள் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. சில ஊடகங்கள் அதிமுக வெல்லும் எனக் கணித்துள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட எக்சிட் போல் கணிப்பில் தவெக அதிக இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, தவெக என 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்துகணிப்பு வெளியாகியிருக்கும் சூழலில், மே 4 ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் கருத்து கணிப்புக்கு பின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். வைகோ பேசுகையில், "தமிழ்நாட்டில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும். தவெகவுக்கு மாணவர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், தியாகத்தால் உருவானது திராவிட இயக்கம் என்றும் அதை ஒருபோதும் அழிக்க முடியாது. மே 4 ஆம் தேதி எண்ணும் போதுதான் தெரியவரும். திமுக வெற்றி பெறும், இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்பதே என்னுடைய கணிப்பாக உள்ளது. திமுக கூட்டணியும் அதிக இடங்களில் வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார் வைகோ.
விஜய் தலைமையிலான தவெக, தமிழக சட்டசபை தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கூறி வந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது, தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications