தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக.. எல்பிஜி சிலிண்டர் விலை 500! பெட்ரோல் விலை 75 ஆக குறைக்கப்படும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கனிமொழி எம்பி வழங்கினார். தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இது குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

DMK election manifesto for 2024 Lok Sabha election will be released by CM Stalin tomorrow

இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பி தலைமையில் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையின் இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், லோக்சபா தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:-

அனைவருக்கும் வணக்கம்
தேர்தலுக்கு முன்பாக அறிக்கை தயாரித்து பொறுப்புக்கு வந்த பிறகு அதை முழுமையாக நிறைவேற்றி காட்டுவதில் முதன்மை இயக்கமாக திமுக விளங்குகிறது. சொன்னதை செய்வோம் சொல்வதை செய்வோம் என்ற கருணாநிதியின் அளித்துள்ள உறுதிமொழி ..இது உறுதிமொழி மட்டும் அல்ல.. எங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை.

அந்த வகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயரிக்க முடிவு செய்யப்படது. கனிமொழி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்து அதையெல்லாம் செயல்படுத்தக்கூடிய திட்டங்களாக மாற்றி ஒப்படைத்துள்ளார்கள். எனவே இது திமுக தேர்தல் அறிக்கை மட்டும் இல்லை.. தமிழ மக்கள் அறிக்கையாக அமைந்துள்ளது

பாஜக இந்தியாவை எல்லா வகையிலும் பாழ்படுத்திவிட்டது. கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவில் உள்ள கட்டமைப்புகளை சிறுக சிறுக சிதைத்துவிட்டது. கையில் கிடைத்த அதிகாரத்தை பாஜக வீணடித்துவிட்டது. இனியும் மோடி அரசு தொடர்வது நாட்டுக்கு நல்லது அல்ல. நாட்டின் மீதான அக்கறையில் இந்தியா கூட்டணியை அமைத்து இருக்கிறோம்.

சமத்துவம் சமதர்மம் என்ற எண்ணம் கொண்ட ஆட்சியாக அமையும். சகோதரத்துவம் கொண்ட ஆட்சியாக அமையும். மொத்தத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கும் அரசாக அமையும்.
64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை தயார் ஆகியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான உன்னத திட்டங்கள் தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித்திட்டங்கள் என சிறப்பாக இந்தக் குழு தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்தக் குழுவை சந்தித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்த எல்லாருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்

* மாநில உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு திருத்தப்படும்
* ஆளுநர் பதவி என்பது தேவையில்லாதது என்றாலும் இருக்கும் வரை முதல்வரின் ஆலோசனை பெற்று நியமிக்கபப்ட வேண்டும்.
* ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்
* உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்
* புதுவைக்கு மாநில அந்தஸ்து

* மத்திய அரசு பணிக்கு தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும்.
* அனைத்து மாநில வளர்ச்சிக்கும் சம அளவு நிதி
* திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கபப்டும்.
* தாயகம் திரும்பிய இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
* ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செயய்யப்படும்.
* புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யபப்டும்.

* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்
* நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலை உணவு
* இந்தியா முழுவதும் மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.
* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு.

* எல்.பிஜி சிலிண்டர் விலை 500 ஆக குறைக்கப்படும்.
* பெட்ரோல் விலை 75 ஆக் குறைக்கப்படும்.
* டீசல் விலை: 65ஆக குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினா.ர்

முன்னதாக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக தலைமை கனிமொழி தலைமையிலான குழுவை அமைத்திருந்தது. அந்த குழு தேர்தல் அறிக்கை தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டது, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களிடம் கருத்துகளைப் பெற்றுத் தேர்தல் அறிக்கை அறிக்கையைத் தயார் செய்து இருந்தது. இந்தச் சூழலில் தான் இன்று காலை தேர்தல் அறிக்கையை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+