திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கப் போவது இவர்கள் தான்... 8 பேர் கொண்ட குழுவின் பணி என்ன..?
சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை படு தீவிரமாக செய்து வருகிறது திமுக. இணையவழி பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட திமுக தலைமை அடுத்தக்கட்டமாக தேர்தல் அறிக்கையில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் 8 பேருக்கு வாய்ப்பளித்து அது தொடர்பான விவரத்தை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன். அதில் டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகிய 8 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்த டி.ஆர்.பாலு, மக்களை சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து தேவைக்கேற்ப தேர்தல் அறிக்கையை வடித்தெடுத்தார். அதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மக்களை நேரில் சந்தித்து தொகுதிவாரியாக உள்ள நீண்டகால பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கேற்றார் போல் திமுக தேர்தல் அறிக்கை வடித்தெடுக்கப்பட உள்ளது.

இதற்கான சுற்றுப்பயணத்தை டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரில் 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி அல்லது எ.வ.வேலு ஆகியோரில் ஒருவர் இக்குழுவில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோல் நடக்கவில்லை.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications