Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேத்து வந்தவருக்கு பதவியா? அப்போ எங்க போறது? கோவையை கொந்தளிக்க வைத்த லெட்டர்! ஷாக் செந்தில் பாலாஜி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி திமுக தேர்தல் பணிகள் வேகமெடுத்து வரும் சூழலில், கொங்கு மண்டல அரசியலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்துள்ள நிலையில், கட்சிக்குள் ஆதரவும், எதிர்ப்பும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

செந்தில் பாலாஜியின் நியமனத்துக்குப் பிறகு, மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் சில அமைச்சர்களே கூட செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக நகரத் தொடங்கியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், கட்சியின் சீனியர் தலைவர்கள் சிலர், "அனைத்து அதிகாரங்களும் ஒரே நபரிடம் குவிகின்றன" என்ற காரணத்தால் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Senthil Balaji mk stalin DMK

2026 சட்டமன்ற தேர்தல்

இந்த சூழலில்தான், கோவை வடக்கு மாவட்ட திமுகவில் சுமார் 70 நிர்வாகிகள் ஒரே நேரத்தில் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகிய தகவல், திமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் தொடங்கியவர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த அவர், சில காரணங்களால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் அணியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார்.

திமுக உட்கட்சி பூசல்

ஆனால், அங்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திமுகவில் இணைந்தார். திமுகவில் சேர்ந்த உடனேயே, செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட பொறுப்பாளர், பின்னர் மாவட்டச் செயலாளர் என பொறுப்புகள் கிடைத்தன. 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவின் பலம் வாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக எதிர்த்து வெற்றி பெற்றது, அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது.

செந்தில் பாலாஜி நியமனம்

அதன் பின்னர், மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை போன்ற முக்கிய அமைச்சகங்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. கொங்கு மண்டலம் முழுவதும் அவர் நடத்திய மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள், அமைப்புச் செயல்பாடுகள் ஆகியவை திமுக தலைமையின் கவனத்தை ஈர்த்தன. இதன் அடிப்படையில், கோவை மண்டல பொறுப்பாளராகவும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். பாரம்பரியமாக அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்த கோவை மாவட்டத்தில், திமுகவின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திமுக தேர்தல் பணிகள்

தற்போது வழக்குகள் காரணமாக சிறை சென்று வந்தாலும், கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சருக்கு இணையான அதிகாரத்துடன் செயல்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 2026 தேர்தலில் கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அவர் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கோவை வடக்கு மாவட்ட திமுகவில் ஏற்பட்டுள்ள ராஜினாமா விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை திமுக ராஜினாமா

விளாங்குறிச்சி பகுதிக்கழகத்திற்கு உட்பட்ட 9-வது வார்டு செயலாளர் மயில்சாமியின் லெட்டர் பேடில், வட்டச் செயலாளர், துணைச் செயலாளர், வட்டப் பிரதிநிதிகள், பகுதிக்கழக நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், "நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துள்ளோம். அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளோம். ஆனால் சமீப காலமாக அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒருகாலத்தில் அவர்களை எதிர்த்து அரசியல் செய்த நாங்கள், இன்று அவர்களுக்குக் கீழ் பணியாற்ற முடியாது" எனக் கூறுகின்றனர்.

திமுக தலைமைக்கு சவால்

கோவை மட்டுமல்ல ஈரோட்டிலும் இதே நிலை தான் நிலவுகிறது. அங்கு திமுக முன்னாள் அமைச்சரான என்கேகேபி ராஜா செந்தில் பாலாஜிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கொங்கு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப்பூசல், திமுக தலைமை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+